பகுதி 26

4K 135 8
                                    


ஹேய் அருண் நீ Evening என்ன கூட்டிட்டு போக வர வேணாம். நான் இன்னைக்கு Half day போட்டுட்டு மாமா வீட்டுக்கு போறேன்.

தெரியும், Uncle எனக்கு Phone பண்ணாரு. நீ கெளம்புறதுக்கு 30 minutes முன்னாடி எனக்கு Phone பண்ணு. நான் வந்து கூட்டிட்டு போறேன்.

ஒனக்கு இன்னிக்கு meeting இருக்கே, நீ Busy, வரமாட்டேன்னு நா Already சொல்லிட்டேன்.

அது இல்ல அனு, மாமாவே Call பண்ணி Invite பண்ணாரு. போகலனா நல்லா இருக்காது. Suppliers கூட Meeting தாத்தாவே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாரு. So நாம சேந்தே போலாம்.

சரி, Bye.

ஸ்வேதாவுக்கு ஒரு வரண் வந்திருந்தது. அவளை இன்று பெண் பார்க்க வருவதால் தான்இருவரையும் மாமா வீட்டுக்கு அழைத்திருந்தார். சந்திரன் -திலகா தம்பதியினரின் மூத்த மகன் சஞ்சய், Doctor. அவன் ஏற்கனவே ஒரு திருமண வீட்டில் ஸ்வேதாவை பார்த்து பிடித்துப் போயிருந்தது. அவன் வீட்டிலிருந்து ஏற்கனவே பெற்றோர் வந்து ராஜசேகர் வீட்டில் முறைப்படி பெண் கேட்டனர். அவர்கள் குடும்பம் பற்றியும் சஞ்சய் பற்றியும் விசாரித்ததில் எல்லோரும் நல்ல விதமாகவே சொன்னதால் ஸ்வேதாவின் வீட்டினரும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்கள். இன்று ஒரு Formalityக்காகத் தான் இந்த பெண் பார்க்கும் உற்சவம்.

"என்னடா Life ஒரே Boaring ஆஹ்இருக்கேன்னு போன வாரம் தான் நெனச்சேன். அதுக்குள்ள பாரு ஸ்வேதா Marriage Topic Start ஆகிடுச்சி. நிச்சயதார்த்தம், கல்யாணம், Shopping னு நெறய வேல இருக்கு. செம்ம ஜாலி இல்ல. "

மாமா வீட்டுக்கு போகும் வரை உற்சாகம் பொங்க பேசிக்கொண்டே வந்தாள் அனு.

"ஸ்வேதா ரொம்ப நல்ல பொண்ணுடா, அவ நல்ல மனசுக்கு தான் அவளுக்கு ரொம்ப நல்ல வாழ்க்க அமயப் போகுது. அத்த கூட ரொம்ப சந்தோஷப் பட்டாங்க. இருக்காதா பின்ன அவங்க மருமகன் Neurologist ன்னா சும்மாவா!"

இதற்கிடையில் அருண் Radio வை On செய்ய, " அதான் பேசிட்டு இருக்கேன்ல " என்று முறைத்துக் கொண்டே அதை Off செய்து விட்டு மீண்டும் பேசத்தொடங்கினாள். " கொஞ்சம் விட்டா காதுல இருந்து Blood வந்துடும் அனு " என்று அருண் அழாக்குறையாக சொல்லவும் அவனை முறைத்துவிட்டு அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டு இருந்தாள். ஆனால் இரண்டு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியாமல் அவள் மீண்டும் ஸ்வேதா, சஞ்சய் என்று தொடங்க இம்முறை அருணுக்கு அழுகைக்கு பதில் சிரிப்பு தான் வந்தது.

என் அன்புள்ள சிநேகிதிOnde histórias criam vida. Descubra agora