தாத்தாவுடன் அமர்ந்து TV பார்த்துக் கொண்டிருந்தான் அருண். பழைய Black and white பாடல்களை அவர் ரசித்துக் கொண்டிருக்க அருணுக்கு தான் வாழ்வே மாயம் BGM கேட்டது. எல்லாம் இந்த அனுவால் வந்த வினை. அவள்தான் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து பாடல் கேட்க Company கொடுப்பாள். இப்போது அவள் இல்லாததால் தனியே பார்க்க முடியாது என்று வலுக்கட்டாயமாக அருணை பிடித்து வைத்திருந்தார் தாத்தா.
நல்ல வேளையாக அப்போது மேனேஜர் இடமிருந்து போன் வந்தது. அதற்கு பதில் சொன்னவாறே எழுந்து அறைக்கு போனான். அங்கு போய் கட்டிலில் அமர்ந்தவனுக்கு அறையில் அனு இல்லாதது என்னவோ போலிருக்க அவளுக்கு Call செய்தான். கடந்த இரண்டு நாற்களில் அதிக நேரம் அவள் Mobile off ஆகத் தான் இருந்தது. காலையில் அவளாக ஒரு தடவை பேசுவாள். அதுவும் School கிளம்புவதாகவும், Late ஆகுவதாயும் சொல்லி அவசரமாக Cut செய்து விடுவாள். மற்ற நேரங்களில் அருண் Try செய்தால் போன் Off செய்யப்பட்டிருக்கும். இன்று கேட்டதற்கு Charge இல்லை என்று சொன்னாள்.
இப்போதும் அவள் Mobile Off ஆகவே இருக்க, சுஜிக்கு அழைத்தான். அவள் அனுவிடம் கொடுத்ததும் " என்ன அனு இப்பயும் Phone off பண்ணி வெச்சிருக்க, நான் Lunch timeலயும் Try பண்ணேன் அப்பவும் Off. " மனதின் தவிப்பு கோபமாய் வெளிவந்தது.
இல்ல டா charge இல்லாம ....
அதென்ன டீ எப்போ பாத்தாலும் Charge இல்ல Charge இல்லன்னு சொல்லிட்டு இருக்கே. Phone ல எதாச்சும் Problem னா சொல்ல வேண்டியது தானே, புதுசு வாங்கி குடுத்துருப்பேன். ஹ்ம்ம் Ok, ஒனக்கு என்ன Mobile வேணும்னு சொல்லு. நான் நாளைக்கி வாங்கி எடுத்துட்டு வரேன்.
அருண் அதெல்லாம் வேணாம். இங்க கொஞ்சம் வேல, அதான் Charge போட மறந்துட்டேன். Sorry.
அவள் Sorry சொல்லவும் அருணுக்கு சங்கடமாய் இருந்தது. அவளை திட்டிவிட்டோமே என்பது அப்போது தான் உறைக்க "இல்ல Sorry எல்லாம் சொல்லாத. Phone ல எதாச்சும் Problem இருந்தா புது Phone வாங்கி தரலாமேன்னு தான்..." என்று இழுத்தவன் நிலைமையை சுமுகமாக மாற்ற எண்ணி " நீ கூலா அங்க போய் உக்காந்துட்டு இருக்க, என்ன பழைய Songs ஆ கேக்க சொல்லி இந்த தாத்தா எப்டி Torture பண்றாரு தெரியுமா?!! "
![](https://img.wattpad.com/cover/98446885-288-k86604.jpg)