இரவு நீண்ட நேரம் உறக்கம் வராமல் புரண்டதால் விடிந்த பின்னும் உறங்கிக் கொண்டு இருந்தாள் அனு. அவளுக்கு முன்பே எழுந்து கொண்ட அருண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை எழுப்பத்தோன்றாமல் குளித்துவிட்டு வந்தான். அப்போதும் அவள் எழாமல் படுத்திருக்கவே அவளருகில் போய் எழுப்பினான். "அனு 7 o'clock ஆகப்போகுது எழுந்திரி" அருண் லேசாக தட்டவும் விழித்தவள் "Good morning " என்று முணுமுணுத்து விட்டு அடுத்த பக்கம் திரும்பிப் படுத்தாள். "ஹேய் Good morning சொல்றதுக்கா ஒன்ன எழுப்பினேன்! இன்னைக்கி Monday, school போகலயா? " அவன் சொல்லவும் கடிகாரத்தை பார்த்த படி எழுந்து உற்கார்ந்தாள். வாட்டமாய் உற்கார்ந்திருந்தவளை பார்த்தவன் " ஒடம்பு சரியில்லயா, Dull ஆஹ் இருக்க? " என்றபடி அவள் நெற்றியில் கைவைத்து பார்த்தான். "அதெல்லாம் ஒன்னுமில்ல" என்று சொல்லிவிட்டு குளியலறைக்குப் போய் பல் துளக்கி முகம் கழுவிவிட்டு வந்தாள். அருண் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்த படி Laptop ஐ பார்த்துக் கொண்டிருந்தான்.
விடிஞ்சதும் இந்த Laptop ல தான் முழிக்கனுமா?
"இல்ல அனு விடிஞ்சதும் எப்பவும் போல உன் Lucky face ல தான் முழிச்சேன். " அருண் சொல்லிவிட்டு அவளை பார்த்து புன்னகைத்தான். அதற்கு மேல் பேச்சை வளர்க்கத் தோன்றாமல் அவன் சொன்னதற்கு தலையாட்டிவிட்டு கீழே போனாள். சமயலறையில் இருந்த லட்சுமியிடம் Tea போட சொல்லிவிட்டு இவள் வெளியே தோட்டத்துக்கு போனாள்.
சூரியனின் மெல்லிய காதிர்களால் இருள் விலகி இருந்தது. இதமான தென்றல் வீச அப்போது தான் மலரத் தொடங்கியிருந்த ரோஜா மொட்டுகள் மெல்ல அசைந்தாடின. புல்தரை மேல் பனி படர்ந்திருந்தது . நேற்று இரவு முழுக்க அழுததில் மனம் அமைதி பெற்று தெளிவடைந்தது போல இருந்தது அனுவுக்கு. அவள் மனதுக்கு இதமாய் ரம்மியமாக இருந்தது அந்த காலைப்பொழுது. கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து விட்டவள் மீண்டும் வீட்டினுள் போனாள். லட்சுமி Tea போட்டு வைத்திருக்கவும் அதை எடுத்துக் கொண்டு மேலே அறைக்குப் போனாள்.
![](https://img.wattpad.com/cover/98446885-288-k86604.jpg)