ஏற்கனவே ப்ரியாவை நினைத்து வேதனையில் இருந்தவன், அனுவை அந்த நிலையில் கண்டதும் இன்னும் உடைந்து போனான்.
அவன் வரும் வரை சாப்பிடாமல் காத்திருந்த தாத்தாவுக்காக, ஏதோ பெயரளவில் உண்டு விட்டு தன் அறைக்குள் புகுந்தான்.
இரவு முழுக்க ஏதேதோ எண்ணங்கள் அவனைப் பாடாய்ப் படுத்தின. எவ்வளவு முயன்றும் தூக்கம் வராது போகவே எழுந்து போய் பழைய Album ஒன்றைப் புரட்டினான்.
அதில் கையில் Teddy bear உடன் தலையை கொஞ்சம் சரித்து அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் குட்டி அனு ... அனுராதா.
🍃🍁🍃🍁🍃🍁
அருண் இங்கப் பாரு பக்கத்து வீட்டுக்கு ஒரு குட்டிப் பாப்பா வந்திருக்கு
Homework செய்துகொண்டிருந்த அருணிடம் அந்த 3 வயது குழந்தையைக் காட்டினாள் சுமதி.
சிவப்பு நிறத்தில் ஒரு Frock, அதற்கு Match ஆக Shoe, hairpin போட்டு Cuteஆக இருந்தது அந்த குழந்தை.
"அனு குட்டிக்கு நா Biscuit எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி குழந்தையை கீழே இறக்கிவிட்டுப் போனாள் அம்மா.
நீயும் எழுதுறியா?
முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு சரி எனத் தலையாட்டிவிட்டு அவன் கொடுத்த Paper இல் பென்சிலால் கோணல் கோணலாய் வட்டம் போட்டாள் குட்டி அனு.
"ஹே இங்க பாரும்மா இதுக்கு Circle போடக்கூட தெரியல " அவள் வரைந்ததை தாயிடம் காட்டிச் சிரித்தான்.
அவ சின்னப் பாப்பாடா. அவளுக்கு எழுதவெல்லாம் தெரியாது.
அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள் சுமதி.