பகுதி 27

4.1K 143 16
                                    


ஸ்வேதாவின் திருமணத்துக்கு முன்னரே விக்கி, சிந்து திருமண நாள் குறிக்கப்பட்டிருந்தது. நாட்கள் இயல்பாய் நகர அருணுக்கு புது Project வேலையும் சேர்ந்து அவன் அதிக நேரம் Office, site என்று Busy ஆக இருந்தான். அனு School போவதற்கு கூட Driver ஏற்பாடு செய்திருந்தான்.

Office முடிந்து சற்று முன்னதாகவே வீட்டுக்கு வந்திருந்தாலும் Fileஐ பார்த்த படி யாருக்கோ போனில் கத்திக்கொண்டிருந்தான் அருண். எதுவும் பேசாமல் அருணுக்கு Tea கொண்டுவந்து வைத்துவிட்டு காதில் Ear phone மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கத் தொடங்கினாள் அனு. போன் பேசி முடித்துவிட்டு Teaஐ கையில் எடுத்தவன், கட்டிலில் படுத்தபடி பாட்டு கேட்டுக் கொண்டிருந்தவளை பார்த்துவிட்டு அவள் பக்கம் வந்தான்.

நான் வந்ததுல இருந்து எவ்ளோ Tension ஆஹ் இருக்கேன். நீ கூலா உக்காந்து பாட்டு கேட்டுட்டு இருக்கியா?

யாரு பெத்த புள்ளயோ, Work load தாங்காம லூசாகிடுச்சி. ஏன்டா இப்ப நான் பாட்டு கேக்குறதுக்கும் நீ Tension ஆஹ் இருக்குறதுக்கும் என்ன சம்மந்தம்? . உன் Phone லயும் Songs இருக்குல்ல, வேணும்னா கேளு இல்லாட்டி போய் தாத்தா கூட News பாரு. சும்மா என்ன Disturb பண்ணாம.

சொல்லிவிட்டு அடுத்த பக்கம் தலையை திருப்பிக் கொண்டவள் அருண் போகாமல் அவள் எதிரிலேயே நிற்கவும் மீண்டும் அவன் பக்கம் திரும்பினாள். கையில் Tea cup உடன் அப்படியே முறைத்துக் கொண்டு நின்றான் அருண்.

ஹஹா இந்த போஸ்ல வீட்டு முன்னாடி ஒரு Statue வெக்கலாம் அருண். Super ஆஹ் இருக்கும்.

சொல்லிவிட்டு சிரித்தவள் அவன் முறைத்துக் கொண்டே நிற்கவும் எழுந்து போய் மேசையிலிருந்த Bag ஐ எடுத்து வந்து அருணிடம் நீட்டினாள்.

"Dark chocolates?? நீ தான் இது சாப்ட மாட்டியே, யாரு குடுத்தாங்க? " Bag இனுள் பார்த்தபடி கேட்டான் அருண்.

யாரும் குடுக்கல, நான் தான் வாங்கிட்டு வந்தேன் ஒனக்கு.

எனக்கா?

ம்ம், Dark chocolate நல்ல Mood booster. சாப்டு Tension கொறயும். அப்டியே மூளையும் நல்லா Work பண்ணும்.

என் அன்புள்ள சிநேகிதிWhere stories live. Discover now