காலை உணவு தயாரானதும் எல்லாவற்றையும் Dining table இல் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் அனு. Good morning சொல்லிக் கொண்டு தாத்தா வந்து அமரவும் "Good morning தாத்தா, இன்னைக்கி Sunday Special பூரி & Potato fry " உற்சாகமாய் பரிமாறினாள். அது தாத்தாவுக்கு பிடிக்குமோ இல்லையோ அனுவுக்கு ரொம்ப பிடிக்கும். அவள் என்ன சமைத்தாலும் தாத்தா சாப்பிட்டு விட்டு பாராட்டுவார். அருணும் சமையல் விடயத்தில் அவளை கிண்டல் செய்வதுகிடையாது. அக்கறையாக ஏதாவது செய்து வைத்துவிட்டு அதை இவர்கள் சாப்பிட்டும் வரை ஆர்வமாய் காத்திருப்பவளை விளையாட்டுக்கு கூட எதுவும் சொல்லி காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பான். பெரும்பாலும் அவள் சமைத்தால் நன்றாகவே இருக்கும். ஆனால் எப்போதாவது புது Dish Try பண்ணுவதாக சொல்லி ஏதாவது சொதப்பி வைக்கும் போது தான் தாத்தாவும் பேரனும் சாப்பிட்டு முடிக்க படாத பாடு படுவார்கள்.
"என்னம்மா, அருண் இன்னும் வரல? "
"அவன் இன்னும் எழுந்திரிக்கவே இல்ல தாத்தா, Night எதோ Files பாத்துட்டு இருந்தான். Late ஆ தூங்கிருப்பான்னு நெனக்கிறேன். நீங்க சாப்டுங்க தாத்தா, நா அவன எழுப்பி பாக்குறேன். " சொல்லிவிட்டு மேலே அறைக்குப் போனவள், அருணைத் தேட அவனோ ஏற்கனவே எழுந்து குளிக்கப் போயிருந்தான்.
அவன் வந்ததும் ஒன்றாகவே சாப்பிடப் போகலாம் என்று நினைத்தவள் சோபாவில் அமரப் போக, அதற்குள் அவள் குறும்புத்தனம் எட்டிப்பார்த்தது. மெதுவாக எழுந்து போய் குளியலறையை வெளிப் பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டாள். அருண் கதவை திறக்க முயற்சிப்பது தெரியவும் பயங்கர உற்சாகமாய் அதனை ரசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் திடீரென அவள் எதிர்பார்க்காதவாறு அருணின் "அம்மா " என்று அலரும் சத்தம் கேட்டது. உடனே பதறியடித்துக் கொண்டு கதவை திறந்து " அருண் என்னாச்சு " என்று கேட்டுக்கொண்டு குளியறையில் காலடி எடுத்து வைத்தது தான் தாமதம் ஒரு வாளி நிறைய தண்ணீரை அவள் மேல் ஊற்றினான் அருண். தொப்பாக நனைந்தவள் தலைவிரி கோலத்தில் பத்ரகாளி போல முறைத்துக் கொண்டு நிற்கவும் அவளை பார்த்து கைதட்டி சிரிக்கத் தொடங்கினான் அருண்.
![](https://img.wattpad.com/cover/98446885-288-k86604.jpg)