இரவு 10.30 மணி. உறக்கம் வராமல் தன் அறையில் அலைந்தவன் அனுவிற்கு Phone செய்தான்.
அருண் ...
இன்னும் தூங்கலயா?
இல்லடா தூக்கம் வரல,ரொம்ப Depressed ஆ இருக்கு. நீ Meet பண்ணன்னு மாமா சொன்னாரு. உன்கிட்டா கோவமா பேசினாரா?
கோவமா இல்ல. But என்னால அவர Convince பண்ண முடியல.
பரவால்லடா. அப்பா, அம்மா இல்லாம அநாதையா இருக்குற எனக்கு அவர் இவ்ளோ பண்றதே பெரிய விஷயம். இதுக்கு மேல நடக்குறது நடக்கட்டும். ஆனா நான் இருக்குற மனநிலைல எனக்கு நல்ல மனைவியாவோ நல்ல மருமகளாவோ இருக்க முடியாது. இன்னொருத்தர் Lifeஐயும் சேத்து Spoil பண்ண போறேன்னு நெனச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.
அவள் எவ்வளவு வேதனையில் இருக்கிறாள் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.அவனால் எதுவும் பேச முடியவில்லை.
நீண்ட மௌனம்.
மனதில் உறுதியாய் ஒரு முடிவு தோன்ற மௌனத்தை அவனே கலைத்தான்.
அனு ... நீ .... என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?
அவன் கேட்ட கேள்வியில் அனு திகைத்துப்போய் நின்றாள். அவளிடம் பதிலை எதிர்பாராமல் அருணே பேசத் தொடங்கினான்.
எனக்கு வேற Solution தெரியல அனு. நம்ம ரெண்டு பேருக்குமே ஒரே Problem தான், கல்யாணம். நாம இப்போ கல்யாணம் பண்ணிக்கலாம். ஸ்வேதா marriage முடியட்டும். அப்பறமா நாம Divorce பண்ணிக்கலாம். ஒனக்கு புடிச்சமாதிரி நீ உன் Lifeஅ அமச்சிக்கோ.
என்னடா Marriage, divorceனு இவ்ளோ Simpleஆஹ் சொல்ற? இந்த விஷயம் மட்டும் தாத்தா, மாமாக்கெல்லாம் தெரிஞ்சா என்ன நடக்கும்னு யோசிச்சியா?
நாம சொல்லாத வரைக்கும் யாருக்கும் தெரியாது. கொஞ்ச நாள் கழிச்சி நமக்குள்ள Problem மாதிரி Scene create பண்ணிட்டு Divorce பண்ணிக்கலாம். யாரும் எதுவும் சொல்ல முடியாது.
அனு இருந்த மனநிலையில் அருண் சொல்வது சரியாகவே பட்டது அவளுக்கு.