இல்ல அனு நா தான் உன்ன சரியா Timeக்கு கொண்டு போய் விட்றேன். Evening school விட்றதுக்கு முன்னமே School Gate கிட்ட வந்து Wait பண்றேன். இப்போ என் Service ல என்ன குறை இருக்குன்னு நீ வண்டி வாங்கனும்ற?
இதான் Problem, நீயே ரொம்ப Busy. இதுல எனக்கு Driver வேல வேற பாக்கணுமா? இந்த மாசம் Salary வந்ததும் Scooty வாங்குறேன்.அதுல தான் School போறேன்.
நா ஒனக்கு ஒரு Driver arrange பண்ணி தரட்டுமா? அதான் வீட்ல இன்னொரு கார் இருக்கே.
அதெல்லாம் வேணாம்.
நீ வண்டி ஓட்ற லட்சணத்துக்கு ஒன்ன தனியா அனுப்பிட்டு Safe ஆ போனியா இல்லையான்னு நா Tension ஆகிட்டு இருக்கனுமா? கார்ல போறதா இருந்தா போ, இல்லைனா நீ வேலைக்கே போக வேணாம் வீட்ல இரு.
அவன் சொல்லவும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சோபாவில்போய் அமர்ந்தாள்.
ஆமா, ஒனக்கு Salary ஒரு நாலு லட்சம் வருமா?
என்னடா நக்கலா?
"இல்ல அனு ஏற்கனவே முதல் மாச Salary ல ஸ்வேதா சுஜிக்கி Dress, தாத்தாக்கு Watch, விக்கி சிந்துக்கு Treat இப்டி ஒரு பெரிய List போட்டு வெச்சிருக்க. ஆஹ், எனக்கு ஒரு Shirt வேற வாங்கித் தரேன்னு இருக்க. இதுல இப்ப Scooter வேற வாங்க Plan பண்ற.அதான் உன் Salary எவ்ளோன்னு தெரிஞ்சிக்கலாமேன்னு " அருண் சொல்லி முடிப்பதற்குள்ளே சிரித்துவிட அவனை முறைத்துவிட்டு அறையை விட்டு வெளியே கிளம்பினாள் அனு.
"ஐயோ தாத்தாகிட்ட போட்டுக்குடுக்கப் போறாளே " அவள் வெளியேறும் முன் கதவுக்கு அருகில் போய் மறைத்து நின்றான்.
நீ கேட்ட Book ரொம்ப கஷ்டப்பட்டு தேடி வாங்கிட்டு வந்திருக்கேன். பாக்காமயே போற.
"வாங்கிட்டியா, லூசு அத சொல்லாம Wasteஆஹ் பேசிக்கிட்டு. " திட்டிக்கொண்டே மீண்டும் உள்ளே வந்தாள்.
அவள் கேட்ட Girl on the train நாவலை நீட்டவும், "Thanks அருண் " சொல்லிக்கொண்டே புத்தகத்தை பிரித்தாள்.
பயமா? எனக்கா? தம்பி இந்த அனுவ பத்தி என்ன நெனச்சீங்க?
"ஆமா இந்ந வாய்க்கு மட்டும் ஒன்னும் கொறச்சலில்ல."என்ற படி அவளிடம் இன்னொரு Grocery bagஐ நீட்டினான்.
அதை பிரித்துப் பார்த்தவள் " Chocolates!!! எனக்கா?, இருந்தாலும் நீ ரொம்ப நல்லவன் அருண். நீ எனக்கு Friend ஆஹ் கெடக்க நா பெரிய புண்ணியம் செஞ்சிருக்கணும். " வராத கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டாள் அனு.
இப்போ எதுக்கு Overact பண்ற.? அந்த Book stall பக்கத்துல உள்ள Super market ல Chocolates க்கு தனியா ஒரு பெரிய Sectionஏ இருக்கு. நாளைக்கு School விட்டதும் போலாம்.
"நிஜமாவா? " கண்கள் மின்னக் கேட்டவள் " ஆமா ஆனா இனிமே வண்டி வாங்குறேன், தனியா போறேன்னு எதுவும் சொல்லக்கூடாது, Ok வா? " அருண் சொல்லவும் சரி என்று தலையாட்டினாள் அருணை முறைத்துக் கொண்டே.