13

3.6K 216 63
                                    

போகும் வழியெங்கும் ரேனு எதுவுமே சுரேஷிடம் பேசவில்லை.அவளின் வீட்டை அடைந்ததும் சுரேஷிற்கு சிறியதொரு ஆச்சரியம்.ரேனுவின் வீடு ஒரு சிறிய பங்களா போல இருந்தது.வீட்டில் இரண்டு கார்கள் வேறு நின்றுகொண்டிருந்தது.ரேனு நல்ல வசதியான வீட்டு பெண்ணாக இருந்தும் ஏன் ரிசப்சனிஸ்ட்டாக ப்ரியாவின் ஆபீசில் வேலை செய்கிறாள் என்று யோசித்தவனை ரேனு "உள்ள வாங்க சுரேஷ்.ஒரு கப் காபி சாப்டு போங்க" என்றாள்.

"இல்ல ரேனு அங்க சங்கீதா வெயிட் பன்னுவா.நான் இன்னொரு நாளைக்கு வருகிறேன்" என்று கூறி ஹாஸ்பிடல் நோக்கி பயனமானான் சுரேஷ்.

வீட்டிற்குள் வந்த ரேனு நேரடியாக அப்பாவிடம் சென்று "அப்பா நான் தனியா பிஸ்னஸ் பன்னலாம்னு இருக்கன்.லைக் கிண்டர்கார்டன். சைல்ட் கெயார் மாதிரி" என்றாள்.
பார்ட்டிக்கு சென்று திரும்பியவள் உடை கூட மாற்றாமல் தனியா தொழில் தொடங்க போவதாக கூறியவளை அவளின் தந்தை பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக "எப்போமா ஸ்டார்ட் பன்னனும் சொல்லு.பன்னிடலாம்.ஸ்டாப் எல்லாம் எப்டி நீயே பார்த்துக்குறியா இல்லன்னா எனக்கு தெரிஞ்ச ரெக்ரூட்மண்ட் கம்பனி இருக்கு அவங்க கிட்ட சொல்வமா "என்றார்.அவள் பதில் ஏதும் கூறாமல் அறைக்குள் சென்று விட்டால்.

ரேனுவின் இந்த நடவடிக்கை வாசகர்களுக்கு புதிதாக இருந்தாலும் அவளின் தந்தைக்கு பழக்கமான ஒன்று .அவள் எப்போதும் முடிவொன்றை எடுத்தால் அது எந்த நேரமானாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும் சரி அவளின் தந்தையிடம் கூறிவிட்டுதான் மற்றவேலை பார்ப்பாள்.கொஞ்சம் பிடிவாதக்காரி. அவளின் தந்தைக்கே இரண்டு கிரனைட் கம்பனிகள் இருக்க அவளோ ப்ரியாவின் கம்பனியில் ரிசப்னிஸ்ட்டாகத்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடித்து சேர்ந்துகொண்டால்.அவளின் என்னம் உலகிலேயே மிகவும் கஷ்டமான வேலை ரிசப்சனிஸ்ட் வேலை என்பது.ஏனென்றால் அவர்கள்தான் எப்போதும் எந்த நிலையிலும் முகம் சுளிக்காமல் வேலை செய்ய வேண்டும்.அந்த சவாலை எதிர்கொள்ள விரும்பியே அவள் அந்த ஜாப்பில் சேர்ந்தாள்.அவளின் தந்தை அவளை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை.காரணம் அவள் சிறு வயதில் இருந்தே எது செய்தாலும் தவறு ஏதும் நிகழாமல் சரியாக திட்டமிட்டு செய்யக்கூடியவள் என்பதாள்.

என் உயிரினில் நீWhere stories live. Discover now