ஹாய் வாட்டீஸ்,
ஒரு வருடத்துக்கும் அதிகமான நாட்களின் பின் ஒரு புது கதையோட வந்திருக்கேன்.முதலில் "ஆடப்பிறந்த அலையிவள்" கதையை இடையில் நிறுத்தியமைக்கு மன்னிப்பை கேட்டவனாக.
"ஆகாஷனா" கதையில் எனக்கு மிகப்பெரிய ஒரு அனுபவம் கிடைத்தது. கதை பற்றிய விவாதம் பற்றி ஒரு புறமிருக்க எதிர்மறை கருத்துக்கள் என்னை மேலும் மேலும் மெருகேற்றியது. "ஆகாஷனா"வின் இறுதி பகுதியில் இருக்கும் பின்னூட்டங்களை படிக்கும் போது எனக்கு மேலும் அதிகமான ஊக்கத்தையும், எனது கதை பலரையும் யோசிக்க வைத்துள்ளது என்ற பெருமிதமும் என்னை மேலும் உற்சாகப்படுத்துகின்றது.
எனது "என் உயிரினில் நீ" ( அது ஒரு சாதாரன காதல் டெம்ப்ளேட் கதைதான்) தவிர்த்து மற்ற கதைகள் எல்லாமே female centric ஆகவே இருக்கும்.அதே போலவே எனது புதிய கதையான "ஆகாயம் தீண்டாத மேகம்" உம் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே இருக்க போகின்றது. மேலும் காதல், காமெடி, ரொமான்ஸ் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த கதை கொஞ்சமும் தீனி போடாது என்று வருத்தத்துடன் கூறிக்கொண்டு, எப்போதும் போல வாரத்துக்கு இரண்டு பதிவுகள் தவறாமல் கொடுக்க முயற்சிக்கின்றேன்.
மீண்டும் உங்களிடம் இருந்து எதிர்மறை கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். இந்த கதை முடித்த பின் லாஜிக் இல்லாமல் ஜாலியாக ஒரு கதை எழுதவும் ஆசை உள்ளது. இறைவனின் நியதி எப்படி இருக்கும் என்பதை அப்போது பார்க்கலாம்.
JE LEEST
என் உயிரினில் நீ
Non-fictieRank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடை...