34

3.6K 210 236
                                    

ப்ரியா கூறியதை கேட்ட அர்விந்துக்கு என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினான்.அவன்

"என்ன சொல்ர ப்ரியா.எனக்கு புரியல" என்றவனை

"அர்விந்த், நீங்க என் காதல புரிஞ்சிப்பீங்க என்று ரொம்ப எதிர்ப்பார்ப்போட இருந்தேன்.ஏன் அன்னைக்கு நிஷா மாடிப் படியில இருந்து கீழே விழப்பார்க்காம இருந்திருந்தா நா இன்னமும் அதே எதிர்பார்ப்போட இருந்திருப்பேன். ஆனா உங்களுக்கு என் மேல காதல் தானா  வரல்லயே அர்விந்த்.நிஷாவ காப்பாத்தினதாலதானே நீங்க இப்ப என் மேல பரிதாபப்பட்டு இப்படி பேசுரீங்க.நேத்து இரவு நீங்க  ரம்யா கூட பேசினத நான்  கேட்டேன் . ஏன்  இவ்வளவு நாளா உங்கள நாய்க்குட்டி மாதிரி சுத்தி சுத்தி வந்தப்போ வராத காதல் இந்த இரண்டு நாள்ள வந்திச்சா.ப்ளீஸ் அர்விந்த் என்ன டிவோர்ஸ் பன்னிடுங்க.உங்கள் கெஞ்சிக்கேட்டுகிறேன்" என்றவளை

"ப்ரியா ,தப்பு மேல தப்பு பன்ற.இப்படி பன்னாத.வாழ்க்கைல எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது" என்றான்

அதற்கு அவள்"அர்விந்த் காதல் என்பது அனுதாபத்தாலயோ அல்லது பச்சாபத்தாலேயோ வரக்கூடாது.மனசுல இருந்து வரனும் .உங்க மனசுல இருந்து வர்ர காதலுக்காக இன்னும் 100 வருசம் வேணும்னாலும் நான் காத்திருந்திருப்பேன்.ஆனா உங்களுக்கு என்மேல காதல் ,நான் நிஷாவ காப்பாத்தினதாலதானே வந்திருக்கு.இந்த பரிதாபத்தால வந்த காதல் வேணாம் அர்விந்த் எனக்கு.இதுக்கு அப்புறமும் உங்களுக்கு என்மேல உண்மையா காதல் வந்தா கூட எனக்கு சந்தேகமாத்தான் இருக்கும்.நீங்க இனிமே எனக்கு எது செஞ்சாலும் நீங்க என்மேல உள்ள அனுதாபத்துல செய்றீங்களா,இல்லைன்னா என்மேல உள்ள காதல்ல செய்றீங்களானு சந்தேகம் வரும்.அதே போல நான் நிஷாக்கு ஏதும் நல்லது பன்னா கூட உங்கள இம்ப்ரஸ் பன்னத்தான் நான் பன்றேன்னு நீங்க நினைச்சிடுவீங்கலோ அப்படின்னு எனக்கு தலையே வெடிச்சிடும்.நான் ஏதும் முடிவெடுத்தேன்னா அது லேசுல என் மனச விட்டு போகாது.சோ ப்லீஸ், என்ன விட்றுங்க.உங்களுக்கு புண்ணியமா போகும்.உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்க இன்னொரு பொண்ண கல்யானம் பன்னிக்கோங்க.ஏன் ரேனுவ கூட நீங்க கல்யானம் பன்னிக்கோங்க .அவளும் உங்கள ரொம்ப விரும்பினா. ஆனா அவள சரி மனசால காதலிங்க.அனுதாபப்பட்டு காதலிக்காம.ஏன்னா என்னைப் பொருத்த வரைல அனுதாபத்துல வார காதல் பிச்சை எடுத்து ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுற மாதிரி"

என் உயிரினில் நீWhere stories live. Discover now