37

3.6K 226 210
                                    

ஒரு மாதத்தின் பின்,

ஆபீஸ் விட்டு வெளியில் வந்த தீபக் அர்விந்திடம் "டேய் அண்ணா நீ ஓரு வாரம் லீவ் போட்டு அண்ணி கூட உள்ள பிரச்சினைய சால்வ் பன்னு.நான் ஆபீஸ் வேலை எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் " என்றவனை

"டேய்.அப்படிலாம் ஒன்னுமில்லடா.நீ சும்மா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஏதும் புதுசா கிளப்பிவிடாத "என்றான் அர்விந்த்

"டேய் நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல.நீ சொல்லுர பொய்ய நம்ப.ஏதோ ஒன்னு இருக்கு உங்க இரண்டு பேருக்கு நடுவுல .ஒழுங்கா போய் அத சரி செய்ர வழிய பாரு" என்றவனிடம் அர்விந்த்

"சின்னதொரு மனஸ்த்தாபம் இருக்கு.நீ யார்கிட்டயும் இதப்பத்தி பேசாத.கொஞ்ச நாளா ஆபீஸ் வேலையிலேயே பிசியா இருதுட்டேனா.அவ கூட ஒழுங்கா பேச முடியல.சரி ஒரு 3 நாள் நான் ஆபீஸ் பக்கமே வரல்ல.நீயே பார்த்துக்க.அப்புறம் சங்கீதாவுக்கும் ரம்யாக்கும் அதிகமா ஏதும் வேலை கொடுக்காத.எதுவா இருந்தாலும் ரேனுகிட்ட சொல்லு சரியா" என்றவனை

"சரி" என்றான் தீபக், ஆனால் மனதுக்குள் 'அவ என் மனச கொள்ளையடிச்சிட்டாலே.ஒல்லிப்பிச்சான நான் எப்படித்தான் கரக்ட் பன்னுவேனோ' என்று தனக்குள்ளேயே புலம்பியவனை அர்விந்த்

"என்னடா ஏதோ ஒரு பெரிய ப்ளான் ஒன்னு போட்ற போல இருக்கு" என்றான்

"அட போண்ணா நீ வேற "என்று அவன் சலித்துக்கொள்ள இருவரும் வீடு சென்றனர்

வீட்டிற்கு வந்த அர்விந்த் முதல் வேலையாக ப்ரியா எங்கே என தேடினான்.அவளை கானாது போகவே எப்படியும் ஜிம்மிற்குதான் போய் இருப்பாள் என்று அவள் செல்லும் ஜிம்மிற்கு செல்லலாம் என நினைத்தவன் அவள் எந்த ஜிம்மிற்கு செல்கின்றால் என்ற தகவல் தெரியாததால் அவள் அறையில் ஏதும் துப்பு கிடைக்குமா என ஜேம்ஸ்ம்ஸ்பாண்ட் வேலையை ஆரம்பித்தவனுக்கு அவளது டயரியில் அவள் செல்லும் ஜிம்மின் லீப்லெட் இருந்தது.அவள் டயரியில் இன்னும் சில காகிதங்களும் இருக்க அதில் எல்லாம் அவன் நாட்டம் காட்டாமல் ஜிம்மின் அட்றசை மாத்திரம் குறித்துகொண்டு அங்கு சென்றான்.

என் உயிரினில் நீWhere stories live. Discover now