42

5.9K 216 676
                                    

"ஒர் பொண்ணுக்கு தன்னோட வாழ்க்கைல ஒரு நல்ல ஆண் மகன பார்க்குறது என்பது ரொம்ப கஷ்டமான காரியம்.அப்படியே ஒரு நல்ல ஆம்பள ஒன்னு தோழனா கிடைப்பான் இல்ல காதலனா கிடைப்பான் இல்லன்னா கணவனா கிடைப்பான்.எனக்கு தோழனா கிடைக்குற பாக்கியம் கிடைக்கல.காதலனாவும் கிடைக்கல.ஆனா நல்ல கணவனா கிடைச்சிருக்கு.மைதிலிக்கு நல்ல தோழன் அமைஞ்சது ஆனா நல்ல காதலன் அமையல்ல.ரம்யாக்கு நல்ல தோழன் நல்ல கணவன் கிடைச்சது.நல்ல தோழன் ,நல்ல காதலன் ,அருமையான கணவன் இது மூன்றுமே ஒன்னா அமைஞ்சது ரேனுவுக்கு மட்டும்தாண்டா.அவ மனசு போலவே அவளுக்கு எல்லாமே நல்லதாவே கிடைச்சது.ஆனா ஒன்னு மைதிலி லைப்ல நல்ல நண்பன் கிடைச்சா மிஸ் பன்னிடக்கூடாது.உங்க தாத்தா ,அப்புறம் தீபக் தாத்தா மாதிரி "என்று நம் அர்விந்த் ரம்யாவின் தோழி மைதிலி 15 வயதில் எப்படி இருந்திருப்பாலோ அவளை அப்படியே உரித்து வைத்தது போல் இருந்த குட்டி மைதிலியிடம் 63 வயதான ப்ரியா தன் வாழ்க்கை கதை முழுவதையும் சொல்லி முடித்தால்.

இதைக்கேட்ட மைதிலிக்கு கண் கலங்கியது.தன் பாட்டியை இறுக்கி அணைத்தவள்

"சரி பாட்டி.நீங்க கடைசிவரைக்கும் தாத்தாவ ஆரம்பத்துல அதாவது இண்டர்வியூ வந்தப்போ இருந்து ஏன் வெறுத்தீங்கன்னு சொல்லவே இல்லையே" என்று தன் உதட்டை சுழித்தவளுக்கு அவளது வலது மேல் உதட்டில் இருந்த மச்சம் மிகவும் அழகாக இருந்தது.தன் பாட்டி மைதிலிக்குப்பின் தாய் நிஷாவுக்கு இருந்தது இப்போது பேத்தி மைதிலிக்கும் இருந்திருந்தது.

"அட நீயாச்சும் கேட்டியேடா இத " என்று ப்ரியா சின்னதொரு ப்ளாஷ்பேக்குக்கு சென்றால்.

40 வருடங்களுக்கு முன்.....

அர்விந்த் சென்றிருந்த அதே இண்டஸ்றியல் டிரைனிங்கிற்கு இவளது சப்ஜக்ட்டுக்காக ப்ரியாவும் சென்றிருந்தால்.ஒரு நாள் எல்லோருக்கும் ப்ரேக் டைம் கிடைக்க எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.அந்த நேரத்தில் அர்விந்தும் அவனது தோழர்களும் ப்ரியா இருந்த பெஞ்சுக்கு அடுத்த பெஞ்சில் இருந்து அர்விந்தை கலாய்த்துக்கொண்டிருந்தனர்.

என் உயிரினில் நீWhere stories live. Discover now