முடிவுரை

2.6K 135 75
                                    

"அம்மாஆஆஆஆஆஅ" என்று ப்ரியா அலறுவதை கேட்ட ரம்யா உடனே ஹாலில் இருந்தவள் பெட்றூமுக்குள் செல்ல

"என்னக்கா பன்னுது"என்று கேட்டால்.

"ரம்யா என்னால முடியலடா.ரொம்ப பெயினா இருக்கு.ஹாஸ்பிடல் போகலாம்டா"என்றவளை

"சரிக்கா.ஒரு 2 நிமிசம் பொறுத்துக்க"என்று கூறிவிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து நிஷாவிடமும் தன் மகளான வைஷ்னவியிடமும் கொடுத்துவிட்ட..ரம்யா 9 மாத கர்ப்பினியான ப்ரியாவை கைத்தாங்களாக அழைத்து வந்து காரின் பின் இருக்கையில் அமர்த்தி வேகமாக ஹாஸ்ப்பிடலை நோக்கி சென்றனர்.

"அர்விந்த் ப்ரியாவுக்கு திடீரென்று பிரசவ வலி வந்துட்டுடா"என்றவளை

"என்ன சொல்லுற .அவளோட டெலிவரிக்க இன்னும் 2வாரம் இருக்கே "என்றவனை

"இல்லடா திடீரென இப்படி ஆகிட்டு,இப்போ நான் சொல்ரத கொஞ்சம் பொறுமையா கேளு"என்ற ரம்யாவை

"சொல்லு "என்ற அவனின் குரல் கொஞ்சம் பிசிரி காணப்பட்டது.

"டேய் டென்சன் ஆகாத ஓக்கே.வாட்டர் பேக்ல வாட்டர் லெவல் கம்மியாகிட்டாம்.இப்போ ப்ரியாக்கு 2 ஊசி போடனுமாம்.ஏன்னா இப்போதான் 36 வாரம் ஆரம்பிச்சிருக்கு,சோ குழந்தையோட போன்ஸ் அண்ட் உள்ளுறுப்புக்கள் எல்லாம் முழுமையா 38ல இருந்து 40 வாரத்துலதான் வளருமாம்.இப்போ வாட்டர் லெவல் குறைந்ததால பேபிய அவசரமா சீசர் பன்னி வெளில எடுக்கனும்.நான் சைன் பன்ன போறேன் என்ன சொல்ர"என்றவளை

"நீ என்ன வேனா பன்னு ரம்யா..ஆனா ப்ரியாக்கு ஏதும் ஆக கூடாது.குழந்தையா ப்ரியாவான்னு வந்தா அது ப்ரியா மட்டும்தான் ஒக்கே.எதாச்சும் எடக்கு மடக்கா பன்னே.அப்புறம் உன்ன கொல்லவும் தயங்க மாட்டேன்"என்றவனை

"போடாங்....நீ இப்படி சொல்ர.அவ குழந்தைய காப்பாத்துனு சொல்ரா..தாயும் சேயும் நல்லபடியா இருக்க 40% சான்ஸ் இருக்கு.எனக்கு தெரியல.என்ன பன்னனும்னு"என்றவளை

என் உயிரினில் நீDonde viven las historias. Descúbrelo ahora