38

3.9K 227 369
                                    




காலையில் 12 மணிக்கு எழுந்த ப்ரியாவுக்கு இரவு என்ன நடந்தது என்று ஒன்றுமே விளங்கவில்லை.வீட்டிலும் யாருமில்லை.காலையிலேயே அர்விந்த் நிஷாவை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றிருந்தவன் நேற்றே சமையல்கார பாட்டியிடம் இன்று வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தான்.இரவு எதுவுமே சாப்பிடாததால் ப்ரியாவுக்கு பசி வயிற்றை கிள்ளியது.என்ன செய்வது எண்ரு புரியாமல் தவித்தவள் ப்ரிட்ஜை திறந்தாள் அதற்குள் ஐஸ் கிறீமும் ஜூசும் இருந்தது.இரண்டுமே அவளின் டயட்டிற்கு ஒத்து வராத சமாச்சாரஙக்ள்.என்ன செய்வது என்று யோசித்தவள் இன்று ஒரு நாள்தானே பரவாயில்லை என்று இரண்டு லீட்டர் ஐஸ் கிறீம் பக்கட்டுடன் டீவி முன் அமர்ந்து விரல் போன போக்கில் ரிமோட்டுடன் சானல்களை மாற்றி விளையாடிக்கொண்டிருந்தாள்.

மதியம் மூன்று மனியாகியும் யாரும் வரவில்லை.மறுபடி அவளுக்கு பசிக்க ஜூஸ் குடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்று தூங்கியாவள் எழுந்த போது இரவு எட்டு மணி.இன்னும் வீட்டிற்கு யாரும் வரவில்லை என்ற போது அவளுக்கு மனதில் லேசாக பயம் எட்டி பார்த்தது.அர்விந்தின் மொபைலுக்கு கால் பன்னலாமா இல்லையா என்று மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தி கால் பன்னலாம் என நடுவர் தீர்ப்பளிக்க போனை எடுத்து கால் செய்தவள் அவனின் மொபைல் பெட்றூமில் இருந்து அலறுவதை கேட்க அவன் இங்கேயா இருக்கின்றான் என்று பார்த்தவளுக்கு அவன் மொபைலை வீட்டிலேயே விட்டு போய் இருந்தது தெரிந்தது.

இரவு 10.30 க்கு அர்விந்தும் நிஷாவும் வீடு வர நிஷா நன்றாக தூங்கி இருந்தாள்.அர்விந்த் ப்ரியாவை கொஞ்சமும் ஏறெடுத்து பார்க்காமல் நிஷாவை கட்டிலில் தூங்கவைத்து மெதுவாக அவர்களின் படுக்கை அறை கதவை மூடி விட்டு திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல ஹாலில் உட்கார்ந்து இருக்கும் ப்ரியாவிடம் வந்து சில பேப்பர்சை தூக்கி அவள் முன் வீசி விட்டு கிட்சனுக்குள் சென்றான்.

இரவில் இருந்து என்ன நடக்கின்றது என்று புரியாமல் இருந்த ப்ரியாவுக்கு அவன் வீசிய பேப்பர்ஸை என்ன என்று எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி.ஆம், அர்விந்த் டைவோர்ஸ் பேப்பரில் சைன் பன்னியிருந்தது மட்டுமில்லாமல் அதை கோட்டிற்கு சப்மிட் செய்த டாகுமெண்ட்சையும் அட்டாச்ட் செய்து இருந்தான்.

என் உயிரினில் நீWhere stories live. Discover now