இருவரும் ஏர்போர்ட் சென்று போடிங் முடித்து செக் இன் செய்யும் நேரம்
"ஹேய் ப்ரியா,எப்படி இருக்க" என்று யாரோ கூப்பிடுவதை இருவரும் பார்க்க அங்கு ப்ரியாவின் வகுப்புத்தோழன் கௌசிக் நின்றுகொண்டிருந்தான். அவனைக்கண்ட ப்ரியா
"ஹே கௌசிக் எப்போ யூ எஸ்ல இருந்து வந்தே.நீ போனதையும் சொல்லல.வந்ததையும் சொல்லல.சோ பேட்" என்றாள்.
"இல்ல ப்ரியா அவசரமா அப்பா அமெரிக்கா வர சொன்னாங்களா அதான் யார்கிட்டயும் சொல்லக்கூட டைம் இல்லாம போயிட்டேன்.இப்போ ஜஸ்ட் 2 வீக்ஸ் முன்னாடிதான் வந்தேன்.சரி நீ என்ன படிக்கும் போது இருந்தத விட ஒரு சுத்து பெருத்துட்ட" என்று கலாய்த்தவன் அருகில் இருந்த அர்விந்தை பார்த்து
"ஹேய் இது மைதிலி,ரம்யாவோடா ப்ரெண்ட்தானே"என்றவனை
"ரம்யா ப்ரெண்டான்னு தெரில.ஆனா மைதிலியோட ஹஸ்பண்ட்"என்று அவள் ,அர்விந்தும் மைதிலியும் தங்கள் உயிர் தோழிக்கே தெரியாமல் திருமணம் செய்ததை வைத்து கலாய்த்தாள்.
"ஒஹ்ஹ் மைதிலி கல்யானம் பன்னிக்கிட்டாலா!!! அவ எங்க" என்று அங்குமிங்கும் பார்வையால் தேடியவனை ப்ரியா
"இல்லடா அவ இப்போ உயிரோட இல்ல.நான் எல்லாம் உனக்கு டீடைல்லா சொல்ரேன்"
என்று ரத்தினசுருக்கமாக அவனுக்கு கூறினால்.
மைதிலிக்கு நடந்ததை என்னி வருந்தியவனை "ஆமா நீ எங்க போக வந்திருக்க" என்று ப்ரியா கேட்க கௌசிக்"இல்ல.ஒரு பெரிய ப்ராஜக்ட் ஒன்னு நம்மூர் கம்பனி ஒன்னுக்கு கிடைச்சிருக்கு.அந்த ப்ராஜக்ட்கு எப்டியும் ஆட்கள் எல்லா டிபார்ட்மண்டிலும் தேவைப்படும்.எங்க கம்பனி ஒரு அவுட்சோர்சிங் செக்சனை சமீபத்துல ஸ்டார்ட் பன்னோம்.அதான் இன்னைக்கு அந்த ப்ராஜக்ட் கிடைச்ச கம்பனி சைன் பன்ன டெல்லி போறாங்க.நானும் டெல்லி போய் அங்க அவங்கள மீட் பன்னி ஏதும் சப் காண்ட் ராக்ட் கிடைக்குதான்னு பார்க்கனும்" என்றவனை ப்ரியா
"ஹேய் ரியல்லி அதுக்காகத்தான் போறியா.சப்ப்பா.என்னோட பாதி தலைவலி ப்ராஜக்ட் சைன் பன்ன முதல்லயே தீர்ந்திடுச்சு"என்றவளை அவன் ஒன்றும் புரியாமல் "என்ன சொல்ர "என்று கேட்டான்.அவள் அதற்கு உடனே
"ப்ராஜ்க்ட் மொத்தமா எங்க கம்பனிக்குத்தாண்டா கிடைச்சிருக்கு.நீ வேற அதே ப்ராஜக்ட்கு சப் காண்ட்றாக்ட் டிரை பன்றியா .சோ என்னோட பாதி தலைவலி முடிஞ்சி பா" என்றவளை
YOU ARE READING
என் உயிரினில் நீ
Non-FictionRank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடை...