நாட்கள் நகர ப்ரியா ஆபிஸ் செல்வதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டால். அர்விந்தும் ஏன் என்று அவளை கேட்கவில்லை.திடீரென்று ஒருநாள் தான் இனிமேல் ஆபீசே வரப்போவதில்லை என்றவளை அர்விந்தும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சரி என்றான்.இப்போதெல்லாம் அர்விந்த் ப்ரியாவை வார்த்தைகளால் காயப்படுத்துவதில்லை.ஏனென்றால் அவனால் அது முடியவில்லை.ப்ரியாவை காயப்படுத்த நினைக்கும் போது மைதிலி அவன் நினைவுகளில் வந்து அவனைத்தடுத்தால்.அதைவிட முக்கியமாக நிஷா ..அவன் ப்ரியாவை மனதளவில் காயப்படுத்துவது தன் மகளான நிஷாவுக்கு பிற்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற பயம் வந்ததால் அவளை தண்டிக்க வேண்டும் என்ற என்னத்தை கைவிட்டான்.ஆனால் அவள் நிஷாவின் அருகில் வர அனுமதிக்கவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக அர்விந்தின் செயற்பாடுகளில் மாற்றத்தை கண்டவளுக்கு
கண்ணா உன்னை நான் அடையும் நேரம் தொலைவில் இல்லையடா...
என் காதலால் நான் மூழ்கி உன் காதலால் நான் சுவாசிக்க வேண்டுமடா...
என் காதலும் உன் காதலும் கடைசியி நம் காதலாக மாற காத்திருப்பேனடா கண்ணா ..என்று தன் மனதில் தோன்றும் என்னங்களை தன் நாட்குறிப்பில் எழுதி வரத்தொடங்கினால்.
ப்ரியா ஆபீஸ் வருவதை முற்றிலும் நிறுத்தியவுடன் அர்விந்த் நிஷாவை தினமும் ஆபீஸ் கொண்டு போவதை விடவில்லை.அர்விந்த் திருமணத்தின் பின் தினமும் மகளை ஆபிஸ் கொண்டு போய்விடுவான்.அது போலவே இப்பொழுதும் தொடர்ந்தான்.
சில வாரங்களின் பின் ப்ரியாவின் வீட்டிற்கு அர்விந்தும் ப்ரியாவும் வந்திருக்க அர்விந்த் வழமை போல நிஷாவை கூட்டிக்கொண்டு ஆபிஸ் சென்று விட்டான்.இங்கு வீட்டில் அவளுக்கு ஒரு வேலையும் இல்லை என்பதால் ப்ரியாவுக்கு போர் அடிக்க ஆர்ம்பித்தது.வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் இன்று ஆபிஸ் போய் வரலாம்.எல்லோரையும் பார்த்து ஒரு ஹாய் சொல்லலாம் என்று என்னியவள் அவர்களின் ஆபீசுக்கு சென்றாள்.
YOU ARE READING
என் உயிரினில் நீ
Non-FictionRank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடை...