18

3.3K 193 88
                                    

இரண்டு நாள் கழித்து ப்ரியாவும் அர்விந்தும் ஆபிஸ் செல்ல அங்கு ப்ரியாவை எல்லோரும் நலம் விசாரித்தனர்.பிறகு எல்லோரும் அவர்களின் இருக்கைக்கு போனபின் ரேனு கையில் கிடைத்த லெட்டரை எடுத்துக்கொண்டு உடனே ப்ரியாவின் அறைக்குள் ஓடினாள்.

"ஹேய் ப்ரியா,நீ உன் மெயில செக் பன்னல்லயா" என்றாள்

ப்ரியாவோ என்ன என்பது தெரியாமல் முழிக்க "இல்லை ரேனு ,கடைசியா நான் வெள்ளிக்கிழமை தான் செக் பன்னே.அப்றம் கைல அடிபட்டதும் 2 நாளா ஏதும் செக் பன்னல "என்றாள்.

"ஹோய் ,நம்ம எல்லோருக்கும் ஹாப்பி நியூஸ்.புதுசா கட்டப் போற இண்டோர் ஸ்போர்ட் கொம்ப்ளக்ஸ்கு தேவையான எல்லா இண்டீரியரும் நம்மலே பன்ன போறோம்.Guess what..மொத்த ப்ராஜக்ட் வேல்யூ எவ்வளவு தெரியுமா" என்று ப்ரியாவையும் அர்விந்தையும் பார்த்து கேட்க இருவரும் கோரசாக "எவ்லோ ரேனு" என்றனர்.

"டோட்டலா 120 க்ரோர்ஸ்.நமக்கு குறைந்தது 20 கோடியாச்சும் ப்ராபிட் வரும்" என்று குழந்தை போல குதூகளித்தால்.

அர்விந்திற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை.இவ்வளவு பெரிய ப்ராஜக்ட் கிடைத்தது அவனுக்கு மிகவும் சந்தோசத்தை கொடுத்தது.ஆனால் ப்ரியாவோ கவலையான முகத்துடன் காணப்படாள்.அவளிடம் ரேனுவும் அர்விந்தும்

"என்ன ப்ரியா ஒரு மாதிரி இருக்குற.உனக்கு ஹாப்பி இல்லயா" என்றவர்களை

"இல்ல அர்விந்த்.நமக்கு அந்த ப்ராஜக்ட் கிடைச்சது ஹாப்பிதான்.ஆனா அத செய்து முடிக்கிற அளவுக்கு நம்மகிட்ட ஸ்டாப் இல்லயே.அதான் என்ன பன்றதுன்னு யோசிக்கிறேன்"என்றாள்.அதற்கு அர்விந்தோ

"லீவ் இட் ப்ரியா அதுக்கு நான் வேற ஐடியா வெச்சிருக்கேன்.நம்ம அவுட்சோர்சிங் பன்னலாம்.சப் காண்ட் ராக்டர்ஸ்கு கொடுக்காலாம்.நம்ம மெனேஜிங் பார்ட் மட்டும் பார்த்துக்களாம்.என்ன மொத்த ப்ராபிட்டும் நமக்கு வராது.பட் ஸ்டில் நல்ல ஒரு அமவுண்ட் கிடைக்கும் .சோ ப்ராப்ளம் சால்வ்ட்" என்றவனை ச்சே நமக்கு இந்த ஐடியா தோனலயே என்று யோசித்தவள்

என் உயிரினில் நீWhere stories live. Discover now