திடீரென்று வீட்டிற்கு ரம்யா வர குழந்தையுடன் விளையாடிகொண்டிருந்த ப்ரியாவை வந்ததும் எதுவுமே பேசாமல் ஓங்கி ஒரு அறை விட்டால்.வந்ததும் வராததுமாக ரம்யா இப்படி நடந்துகொண்டதை கண்ட அர்விந்திற்கு கோவம் வர
"ஏய் என்னடி.எதுக்கு இப்போ நீ அவள அடிச்ச"என்றதும்
ரம்யா " நீ என்ன அவளுக்கு சப்போர்ட்டா " என்று அவனுக்கும் கை ஓங்க இப்போது ப்ரியாவின் கை ரம்யாவின் கன்னத்தில் பதிந்திருந்தது. தன்னை இத்தனை வருட காலங்களில் ஒரு சொல் கூட கோவமாக பேசாத தன் அக்கா அவளை அடித்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"இதுக்கு அப்புறம் நீ அவரு மேல கைய வெச்ச. என்னை கொலைகாரியாத்தான் பார்க்க வேண்டி இருகும்" என்றவளை முறைத்த ரம்யா
அவள் கையில் இருந்த கூரியரை அர்விந்திடம் கொடுத்தபோதுதான் ப்ரியா கவனித்தவள் "அடச்சே.இத நாம எப்படி மறந்தோம்.இப்போ நல்லா மாட்டிக்கிட்டோம்னு" மனதுக்குல் நினைத்தாள்.அந்த கூரியரை எடுத்து அதற்குள் இருந்த லெட்டரை படித்த அர்விந்தின் கண்கள் கோபத்தை வெளியிடுவதற்கு பதிலாக கண்ணீரையே தாரை தாரையாக வழிந்தோட செய்தது.
அந்தக்கடிததில்
"அன்புள்ள ரம்யாவுக்கு உன் அக்கா எழுதுவது,
உங்கிட்ட இவ்ளோ நாளைல எப்போமே நான் அக்காவா நடந்ததில்ல.ஏன்னா நான் எப்போமே முடிவுகள அவசரப்பட்டு எடுத்துட்டு ரொம்ப பிடிவாதமா இருப்பேன்.ஆனா நீ எனக்கு எதிர்மாறா செய்யிர எல்லாத்தையுமே கரக்டா செய்வ.உண்மைல நீ அக்காவாவும் நான் தங்கச்சியாவும் பிறந்திருந்தா என்னோட லைப் இப்படி ஆகியிருக்காது.என் லைப்லயே நான் ஒழுங்க டிசிசன் எடுத்து செஞ்ச வேலைன்னா அது பிசினஸ் மட்டும்தான்.அதுவும் சங்கீதா,ரேனுவோட உதவியினால.
YOU ARE READING
என் உயிரினில் நீ
Non-FictionRank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடை...