27

3.4K 214 258
                                    

காலையில் அர்விந்த்,ப்ரியா,ரம்யா,சங்கீதா, ரேனு என்று யாருக்குமே மன நிம்மதி என்பது இல்லாமல் ஆபிஸ் வந்தனர்.இதில் அர்விந்துடைய மனநிலையோ மிகவும் போராட்டத்துக்கு மத்தியில் இருந்தது.ஏனென்றால் நேற்றுவரை ஒரு எம்ப்ளாயியாக இருந்தவனை இன்று ஒரு பார்ட்னராக ரம்யா அறிவிக்க போவதாக கூறியதில் இருந்து அவன் மனதில் தனக்கு எந்த விதத்திலும் உரிமை இல்லாத ஒன்றை ஏற்பதற்கு அவன் மனது விரும்பவில்லை.இருந்தாலும் ரம்யா விடாப்பிடியாக இருந்தால்.அவன் இதை ஏற்காவிட்டால் அவனுடன் ஆயுசுக்கும் அவன் முகம் பார்க்கமாட்டேன் என்று அவள் கூறியதில் இருந்து அவனால் மறுத்து பேச முடியவில்லை.

இங்கு ப்ரியாவோ,தனக்கு என்றுமே உறுதுனையாக இருந்த ரம்யா,சங்கீதா,ரேனு மூவரும் தனக்கெதிராக திரும்பியதில் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தால். இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமென்று அர்விந்தை வேலைக்கு சேர்க்கும் போதே அவளுக்கு தெரியும்.ஆனால் அந்த பிரச்சனை ரம்யாவிடம் இருந்து வரும் ,அந்த நேரத்தில் சங்கீதா மற்றும் ரேனு ஆகியோர் அவளுக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தவளுக்கு நேற்றைய சம்பவம் பேரிடியாகவே இருந்தது.என்ன நடந்தாலும் இந்த சூழ்நிலையை அவள் எதிர்கொள்ள தயாராகிவிட்டால்.

ஆபிஸ் மீட்டிங்க் ரூமில் எல்லோரும் இருக்க ப்ரியா கடைசி ஆளாக உள் நுழைந்தால்.அவள் தன் இருக்கையில் அமரப்போனவள் ஓர விழியால் அர்விந்தை பார்க்க , அவன் கவலையில் வாடியிருப்பான் என்று நினைத்தவளுக்கு அவனின் முகமோ பயத்தை ஏற்படுத்தியது.அவன் ப்ரியா நுழைந்ததை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.அவனின் முகத்தில் வழக்கமாக இருக்கும் ஒரு சாந்தம் இல்லாமல்  உக்கிரமான போருக்கு தயாராகும் வீரனின் முகத்தை போல இறுகிப்போய் இருந்ததை பார்த்தவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.இருந்தாலும் தன் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் இருக்கையில் அமர்ந்தாள்.

"வெல்கம் டு யூ ஆல்.நேரடியா நான் விசயத்துக்கு வரேன்.உங்க எல்லோருக்கும் இந்த கம்பனி என்னோடதுன்னுதான் தெரியும்.ஆனா எங்கப்பா இதை எஸ்டாப்லிஷ் பன்னும் போது எங்க ரெண்டு பேருடைய ,,,ஐ மீன் எனக்கும் என் தங்கச்சிக்கும் சேர்த்து செயார பிரிச்சி எழுதி வெச்சிருக்காரு.அவ என்னைக்குமே கம்பனிக்கு வராததனால உங்கள்ள பல பேருக்கு இந்த விசயம் தெரிய வாய்ப்பில்ல.நேத்தைக்கு லண்டன்ல இருந்து வந்தவங்க வந்த கையோட அவங்க செயார் எல்லாத்தையும் அவங்க ஆருயிர் நண்பனுக்கு எழுதி வைக்க முடிவெடுத்திருக்காங்க.சோ ,இந்த மீட்டிங்க் அந்த செயார் டிரான்ஸ்பர அறிவிக்கவும் நமக்கு கிடைச்சிருக்கிற புது ப்ராஜக்ட்ட எப்படி முன்னெடுத்து செல்வது என்பதையும் பற்றியது" என்று ப்ரியா கூறி முடிக்க எழுந்த ரம்யா

என் உயிரினில் நீWhere stories live. Discover now