🌺17🌺

836 22 7
                                    

இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள  YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல்  வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.

______________________________________

மயங்கிய நிலையில் இருந்த அருந்ததியை மருத்துவரிடம் காண்பிக்க, அவளை நன்றாக பரிசோதித்தவர் என்னவாயிற்று எதனால் இப்படி மயக்கம் வந்தது என்று ரிச்சர்டிடம் விசாரித்தார்.

அவன் தனக்கு தெரிந்த விவரங்களையும், யூகத்தையும் அவரிடம் விளக்க, அருந்ததியின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி விட்டு அவனை காத்திருக்க சொன்னார்.

அரைமணி நேரத்தை குழப்பத்துடன் கடத்திக் கொண்டிருந்தவனை அழைத்து மருத்துவர் சொன்ன விவரங்களை கேட்டு அவனுக்கு மேலும் குழப்பம் அதிகரிக்க தான் செய்தது.

"ஸீ... உங்கள் தங்கைக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து எதுவும் கலக்கப்படவில்லை. யாரோ தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருக்கிறார்கள். அதுவும் அந்த வகை சற்று வீரியம் மிக்கது, ஒரு மாத்திரையே குறைந்தது மனிதனை ஏழு மணி நேரம் வரை எழ விடாது. இது டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் சாதாரணமாக எல்லாம் மெடிக்கலில் கொடுக்க மாட்டார்கள். அநேகமாக நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் ரெகுலராக இதை தினமும் உட்கொள்பவர் தான் பானத்தில் கலந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம் தான் இது போன்ற மாத்திரைகள் எந்நேரமும் கைகளில் இருக்கும். ஒன்றும் பயப்படத் தேவையில்லை, நீங்கள் சொல்கின்ற நேரக் கணக்கின்படி எடுத்துக் கொண்டால் ஒரு ஐந்து மணி நேரத்தில் உங்கள் தங்கை தானாக எழுந்து விடுவார்கள். அதுவரை இங்கே இருந்தாலும் சரி, வீட்டிற்கு அழைத்து சென்றாலும் சரி!"

-Part to be continued on my forum

பூஜைக்கேற்ற பூவிது!Where stories live. Discover now