🌺11🌺

1K 29 9
                                    

"அக்கம்பக்கத்தில் வெளியாட்கள் யாரிடமும் பேசி பழக்கமில்லாததால் அம்மா இறந்த செய்தியை யாரிடம் சொல்வது என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது, அம்மாவின் உடலை அந்த வீட்டில் இருந்து எடுத்து சென்று விட்டால் அடுத்து என் கதி என்ன என்பதே பெரிய கேள்விக்குறியாக எழுந்து என்னை அழுத்தியது. அடுத்து... அடுத்து... என்று மனம் அலைபாய பயத்தோடு அம்மாவின் முகத்தையே பார்த்தபடி விடிய விடிய அமர்ந்திருந்தேன். காலையில் வீட்டு வேலைக்கு வந்தவள் தான் விஷயம் புரிந்து அதிர்ச்சியாகி அந்த வீட்டு சொந்தக்காரருக்கு தகவல் கொடுத்தாள். விஷயம் தெரிந்து வந்த ஆள் என்னை கண்ட மேனிக்கு திட்டினார். இறந்து போன தகவலை கூட உன்னால் சொல்ல முடியாதா? என்று அதட்டியவர் அடுத்தடுத்த வேலைகளை கடகடவென்று செய்ய ஆரம்பித்தார். நடப்பதில் எதிலும் கலந்துக் கொள்ளவும் முடியாமல், தடுக்கவும் இயலாமல் அச்சத்துடன் பார்த்திருந்தேன். எல்லாம் முடிந்தப் பிறகு நேராக என்னிடம் வந்தவர், ஒருவழியாக என்னை பிடித்த பீடை போய் சேர்ந்து விட்டது. நீயும் இன்று இரவுக்குள் இங்கிருந்து உனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு எங்கேயாவது போய்விடு. நாளை காலை ஆட்களை கூட்டி வந்து வீட்டை இடிக்கப் போகிறேன் என முறைத்து விட்டு கிளம்பி போனார். எனக்கு அழுகை அழுகையாக வந்தாலும் வேறுவழி இல்லை என்பது புரிந்ததால் ரொம்ப யோசித்து எந்த வழியும் புலப்படாமல் உஷா மிஸ்ஸால் மட்டும் தான் எனக்கு உதவ முடியும் என நினைத்தேன். அதனால் அவரிடம் உதவி கேட்டு ஏதாவதொரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட சொல்லலாம் என்று தோன்றவும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. வேறு யாரையும் தெரியாததால் அவரை மட்டுமே நம்பி இரவு ஏழு மணிக்கு என்னுடைய ஸ்கூல் பேக் மற்றும் துணிகள் அடங்கிய பெரிய பேக் மட்டும் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு சென்றேன். இருந்த கவலையில் அவர் ஊரில் இல்லை என்பதும் மறந்து விட்டது. வீட்டிற்கு போய் கதவை தட்டினால் உங்கள் நண்... ஷ்... இல்லை... அவங்க பையன் தான் கதவை திறந்தான்!" என நாக்கை கடித்து விட்டு வேகமாக அருந்ததி மாற்றுவதை கண்டு புன்னகை அரும்ப செல்லமாக அவள் காதை திருகினான் ரிச்சர்ட்.

-Part to be continued on...

http://deepababuforum.com/poojaiketra-poovithu-11-deepababu/

Simply use this link on address bar

(or)

Those who want to get the direct link of this story chapters pls go and like my facebook page deepababu forum. ☺☺☺

பூஜைக்கேற்ற பூவிது!Donde viven las historias. Descúbrelo ahora