இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
அனுதினமும் தன் உத்தியோகத்தில் மருத்துவர்கள், நோயாளிகள் என பலதரப்பட்ட ஆண்களுடன் பழகும் வாய்ப்புகளுடைய அட்சயாவே ஒரு கணம் கருணின் செயலில் ஆடிப்போய் விட்டாள் எனில் அருந்ததியின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
எதிர்பாராத நேரத்தில் தன்னருகில் தள்ளிவிடப்பட்ட ரிச்சர்டின் அருகாமை அவளை சற்றே படபடக்கச் செய்து விட்டது.
'இடியட்... எதற்காக இப்பொழுது இவனை இப்படி என்னருகில் தள்ளி விட்டான்? அவன் வந்து என் பக்கத்தில் நின்றுக் கொண்டு இவனை அந்த அருந்ததியின் புறம் நிற்க வைத்திருக்கலாம் அல்லவா? ராஸ்கல்... தனியாக மாட்டட்டும் இருக்கிறதுடி மகனே உனக்கு!' என உள்ளே கறுவியபடி வெளியே முகம் மாறாமல் அமைதியின் திருவுருவமாக நின்றாள் அட்சயா.
கருணுடைய ஷர்ட் தன் ஷாலை உரச நெருக்கமாக நின்றிருந்த தருணம் அருந்ததியின் இதயத்துடிப்பு சட்டென்று நின்று புலன்கள் யாவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
திரும்பி பக்கவாட்டில் அவன் முகம் பார்க்கும் தைரியமில்லாது பதட்டத்தில் துடித்த இதழை மென்மையாக கடித்தபடி தன்யாவின் புறம் லேசாக திரும்பி நின்றாள் அவள். அதைக்கண்டு முகம் சுளித்தவன் தன் அண்ணியிடம் விழிகளால் சமிக்ஞை செய்தான்.
கண்கள் இடுங்க தன் கொழுந்தனை ஒரு பார்வை பார்த்து விட்டு, "இதென்ன இந்த பக்கம் திரும்பி நிற்கிறாய்? மொபைல் கருணின் கையில் உள்ளது அங்கே பார்!" என்று அருந்ததியை மெல்ல அவன் புறம் திருப்பினாள் அவள்.
தவிப்புடன் தன்யாவை நோக்கிய விழிகளை சிரமப்பட்டு விலக்கி கருணின் கைபேசியில் பார்வையை பதித்தாள் அருந்ததி.
அவள் உணர்வுகளை படிக்கும் நிலையில் அவளுடைய அண்ணன் இல்லை. கருணின் செயலால் முதலில் திடுக்கிட்டவன் பின்பு அட்சயாவின் அருகாமையை ஆவலுடன் ரசிக்க தொடங்கி விட்டான்.
- Part to be continued on www.deepababuforum.com
BINABASA MO ANG
பூஜைக்கேற்ற பூவிது!
General Fictionபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...