இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
"சரி வா நாமும் கீழே போகலாம், இங்கே இருந்து என்ன செய்யப் போகிறோம்?" என அருந்ததியை அழைத்துக் கொண்டு லிவிங் ரூமிற்கு வந்தான் ரிச்சர்ட்.
சரியாக அந்நேரத்திற்கு உணவும் வந்து சேர அவர்களை அப்படியே அழைத்துப் போய் உணவு அறையில் அமர வைத்து விட்டான் தருண். தன்யா மற்றவர்களையும் உடன் அமர வைத்து உணவு பரிமாற லேசான முகச்சுளிப்புடன் இருந்த அட்சயா எவரிடமும் பார்வையை உயர்த்தாமல் அமைதியாக சாப்பிட்டாள்.
அருகே அமர்ந்திருந்த கருண் அவளிடம் எதையோ தொணதொணத்து கொண்டே இருக்க சலிப்புடன் அவனை ஏறிட்டவள், அடங்கு என்பது போல் பார்வையாலே அவனை அதட்டினாள்.
"சிடுமூஞ்சி... சிடுமூஞ்சி..." என அவள் மட்டும் கேட்க முணுமுணுத்தவன் சின்ன சிலுப்பலுடன் திரும்பிக் கொண்டான்.
அதைக்கண்டு இதழ் மலர துடித்தாலும் இழுத்து பிடித்த கோபத்துடன் வீம்பாக இருந்தாள்.
அனைவரிடமும் இன்முகத்துடன் விடைப்பெற்ற ரிச்சர்ட் கவனமாக அட்சயாவை தவிர்த்து விட்டு அருந்ததியுடன் வெளியேறினான்.
அதைக் கவனித்திருந்த கருண், "அடுப்பில் இருந்து இறக்கிய கொதிக்கின்ற பாலை தெரியாமல் குடித்து ஒருமுறை சுட்டுக்கொண்ட பூனை பிறகு கறந்த பசும்பாலை கூட சுடும் என்று எண்ணி பயப்படுமாம். அதைப் போல தான் நீயும் நடந்து கொள்கிறாய்!" என அவளிடம் ரகசியம் பேசிவிட்டு குழந்தைகளிடம் சென்றான்.
இவனை... என பல்லைக் கடித்தவள், அவனிடம் சண்டைப் போடும் ஆர்வம் இல்லாமல் சித்துவிடம் சென்று நேராக நின்றாள்.
- Part to be continued on www.deepababuforum.com
YOU ARE READING
பூஜைக்கேற்ற பூவிது!
General Fictionபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...