இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
அட்சயாவை இழந்து விட்டோம் என்கிற வேதனையில் இவன் உழலும் பொழுது திடீரென்ற அவளது வருகையும், துடுக்குப் பேச்சும் ரிச்சர்டின் மனதை வெகுவாக பாதிக்க, வார்த்தையில் அடக்க இயலாத மனப்பாரத்துடன் அங்கே நிற்கப் பிடிக்காமல் வேகமாக வெளியேறினான்.
மனதில் தோன்றும் ஏதேதோ இனிய நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்தவள் மெல்லிய புன்னகையோடு ப்ரேயரை முடித்துவிட்டு விழிகளை திறந்து அருகினில் பார்க்க அவனை காணவில்லை.
அறை முழுவதும் விழிகளை அலைய விட்டவள், "எங்கே போனான் இவன்?" என வாய் விட்டே முணுமுணுத்தாள்.
"ஷ்... அப்பா... உங்கள் பையனை எல்லாம் வைத்துக் கொண்டு எப்படி தான் நான் வாழ்க்கையை ஓட்டப் போகிறேனோ தெரியவில்லை!" என அவன் பெற்றோரின் படத்தை பார்த்து தலையிலடித்து பெரியதாக அலட்டிக் கொண்டவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.
வந்தவளின் பார்வை வட்டத்தில் ஒரு அறையின் கதவு மட்டும் திறந்திருக்க, 'ஓ... இவன் இங்கே தான் இருக்கிறான் போலிருக்கிறது!' என்று அங்கே விரைந்தாள்.
இரு கரங்களையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு தொலை தூரத்தை வெறித்தபடி சிட்அவுட்டில் நின்றிருந்தவனின் அருகில் சென்று அதட்டினாள் அட்சயா.
"ஹலோ... உங்களை நான் என்ன செய்ய சொன்னேன், நீங்கள் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?"
நேர்ப்பார்வையாய் அவள் முகத்தை வெறித்தவன், "இப்பொழுது உனக்கு என்ன தான் பிரச்சனை? அதுதான் உனக்கு வசதியாக ஒன்றை சொல்லி விட்டு விலகி வந்து விட்டேன் இல்லை, பிறகு எதற்காக இங்கே வந்து என்னிடம் வம்பு வளர்க்கிறாய்?" என்று காய்ந்தான், அவள் தனக்கு கிடைக்கவில்லையே என்ற இயலாமையால் உண்டான எரிச்சலோடு.
கண்களில் அக்னி கனலை பற்ற வைத்தவள், "ஓஹோ... நீங்கள் செய்து வைத்திருக்கின்ற வேலைக்கு உங்களுக்கு எரிச்சல் வேறு வருகிறதா?" என்றாள் கோபமாக.
"ஏன்? நான் என்ன செய்தேன்?" என புருவம் சுருக்கியவன், "உன் மாமாவிடம் நேற்று இரவே இந்த திருமணம் வேண்டாம், அருந்ததி திருமணத்தை முடித்துவிடலாம் என்று சொல்லி விட்டேனே!" என்றான் விளக்கமாக.
'இது வேறு நடந்திருக்கிறதா?' என உள்ளுக்குள் திடுக்கிட்டவள் அடுத்த நொடி அவனை உறுத்து விழித்து, "ஆஹான்... உங்கள் வசதிக்கு வேண்டுமென்றால் நான் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் இல்லையென்றால் உதறி தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பீர்கள் அப்படித்தானே?" என்றாள் ஆவேசமாக.
அவள் வார்த்தைகளில் உண்மையில் அதிர்ந்து தான் போனான் ரிச்சர்ட்.
'இவள் என்ன சொல்ல வருகிறாள்? நான் என்னவோ இவளை ஆசைக்காட்டி மோசம் செய்தது போலல்லவா பேசுகிறாள்? இவள் தானே வேண்டாம் வேண்டாமென்று முறுக்கி கொண்டு சுற்றினாள்!'
தன் முகத்தையே பார்த்திருந்தவனிடம், "என்ன?" என்றாள் அதிகாரமாக.
நடக்கவே இயலாத திருமணத்திற்கு எதற்காக தேவையற்ற இந்த விவாதம் என்ற சலிப்பு மனதில் தோன்ற வார்த்தைகளின்றி வேறுப்பக்கம் திரும்பிக் கொண்டான் ரிச்சர்ட்.
சட்டென்று அந்த புறமாக சென்று நின்றவள், "எதுவும் பேசாமல் திரும்பிக் கொண்டால் எல்லாம் சரியாகி விடுமா?" என்றாள்.
ஆயாசத்துடன் விழிகளை மூடித்திறந்தவன், "என்னை என்ன தான் செய்ய சொல்கிறாய்?" என அவளிடமே வினவினான்.
"என் கேள்விக்கு விடைச் சொல்லுங்கள்!"
- part to be continued on www.deepababuforum.com
BINABASA MO ANG
பூஜைக்கேற்ற பூவிது!
General Fictionபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...