இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
பளிச்சென்று இதழ் மலர்ந்த கருண் வழக்கமான தனது ட்ரேட் மார்க் புன்னகையை ஈயென்று முகத்தில் வழிய விட்டான்.
"ஆர் யூ ஷ்யூர்? உனக்கு என்னை பிடித்திருக்கிறதா? திருமணம் செய்து கொள்ள சம்மதமா? ஆக்ட்சுவலி... உன்னிடம் முதலில் நான் தான் என் மனதை தெரியப்படுத்த வேண்டும் என்று என்னென்னவோ ஆசையாக திட்டமிட்டேன். இறுதியில் என் அம்மாவின் தலைமையில் குடும்பத்தில் நடந்த கூட்டு சதியால் எல்லாவற்றிலும் அவர்கள் முந்திக் கொண்டார்கள்!" என்றான் சோகமாக.
அவனுடைய சளசள பேச்சை அருந்ததி ஆர்வமாக கவனித்திருக்க, தன் புலம்பலை முடித்தவன் அவளின் ஆவல் கண்டு கேலியாக இதழ் வளைத்து புருவங்களை உயர்த்தினான்.
சட்டென்று இமைகள் படபடக்க பார்வையை தாழ்த்தியவளை நெருங்கி இன்னும் அவள் இதயத்துடிப்பை எகிற வைத்தவன் அருந்ததி என கிசுகிசுப்பாக அழைத்தான்.
அவனிடம் விழிகளை உயர்த்த முடியாமல் தடுமாறியவள் தொண்டையில் எச்சிலை கூட்டி விழுங்கி, ம்? என்று முனகினாள்.
"நான் உன்னுடன் பழகி உன்னை பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவ்வப்பொழுது நேரில் வந்து சந்திக்கலாமா? உனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே... எதுவென்றாலும் வெளிப்படையாக பேசிவிடு!"
தன் கையில் இருந்த பூத்தண்டுகளை இறுக்கியவள் பின் நிமிர்ந்து மறுப்பாக தலையசைத்தாள்.
"ஹேய்... தாங்க் யூ, சோ ஸ்வீட்!" என்று குதூகலித்த கருண் உற்சாகத்துடன் அவள் கன்னம் கிள்ள, அவளோ சற்றே பீதியுடன் மிரண்டு இரண்டடி பின்னே வைத்தாள்.
அருந்ததியின் முகம் பதற்றத்தில் சூடேறி சிவக்கவும் தான் அவள் நிலையுணர்ந்தவன் வேகமாக அதற்கேற்ப பேச்சை மாற்றினான்.
"ஓ... சாரி, ஶ்ரீ குட்டியிடம் செய்வது போலவே சட்டென்று வந்து விட்டது!" என்று அவளிடம் மன்னிப்பு வேண்டினான்.
அவன் வீட்டில் இருக்கும் குழந்தையோடு தன் செய்கையை கருண் ஒப்பிட்டுப் பேசவும் அவனுடைய மனதில் எந்த விகல்பமும் இல்லை என லேசாக நிம்மதியடைந்தவள் அவனிடம் மெல்ல தயங்கி லேசான முறுவலொன்றை வெளிப்படுத்தினாள்.
- part to be continued on wwe.deepababuforum.com
YOU ARE READING
பூஜைக்கேற்ற பூவிது!
General Fictionபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...