இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
ரிச்சர்ட் பற்றி கேள்விப்பட்ட நாள் முதற்கொண்டு அவனிடமோ அவனுடைய குணத்திலோ எவ்வித குறையும் அட்சயாவினால் கண்டுப்பிடிக்க முடிந்ததில்லை என்பதினால் அவனுடனான திருமணத்தை தான் வெறுத்தாளே தவிர அவன் மீது அவளுக்கு ஆழ்மனதில் நன்மதிப்பு தான் உருவாகியிருந்தது.
அப்படிப்பட்டவன் அவளுடனான திருமணம் தடைபடுவதற்கு தானே காரணகர்த்தாவாக ஆகிவிட்டேன் என கூறுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி என்ன காரணமாக இருக்கும்? இவன் ஏன் இவ்வளவு தயங்குகிறான் என்று குழம்பி தவித்தவளுக்கு என்னவென்று உடனே விவரம் சொல் என அவனிடம் கேட்க முடியாதது வேறு மேலும் சினத்தை தூண்டிவிட்டது.
ஏற்கனவே ஒருமுறை மருத்துவமனையில் கேட்டதற்கே திருமணத்தை நிறுத்த அவ்வளவு ஆர்வமா என்று அவளை குறைப்பட்டுக் கொண்டான்.
அட்சயாவை மேலும் டென்ஷனாக்காமல் விஷயத்திற்கு வந்த ரிச்சர்ட், "ஆக்ட்சுவலி..." என்று அவள் முகம் பார்த்தவன் பின் தயக்கத்துடன் பார்வையை மறுபுறம் திருப்பி சாலையில் பதித்து தன் மனதில் போட்டு குழம்பிக் கொண்டிருப்பதை அவளிடம் வெளியிட்டான்.
"நான் என்னுடைய... வந்து... என்னுடைய இருபது வயதுகளின் துவக்கத்தில் என் தனிமையை போக்கவென்று... என்று... எனக்கு அப்பொழுது அது பெரிய விஷயமாக தெரியவில்லை. எனக்குள் இருந்த மன அழுத்தத்திற்கு அதுதான் தீர்வு என்பது போல நடந்துக் கொண்டு விட்டேன். ஆனால்..." என்று மேலும் தவித்தவன் கீழுதட்டை கடித்தான்.
அச்சூழ்நிலையின் தாக்கத்தால் தன் இதயம் படபடவென்று அடித்துக் கொள்வதை தடுக்க இயலாது தடுமாறினாள் அட்சயா.
"நான்... நான் அப்பொழுது எல்லாம்... அது... அவ்வப்பொழுது வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்தேன்!" என்று முகத்தில் லேசான சிவப்பு படர உரைத்து கை முஷ்டிகளை இறுக்கியபடி விழிகளை இறுக மூடிக்கொண்டான்.
தன் காதுகளையே நம்பமுடியாமல் இமைக்க மறந்து அவனை அதிர்ச்சியுடன் வெறித்தவளுக்கு நேரமாக நேரமாக உள்ளம் உலைக்களமாய் கொதிக்க ஆரம்பித்தது.
'பாஸ்டார்ட்... வேறு பெண்களுடன் இருந்தானாமா...?'
ரிச்சர்டை ஓரிடத்தில் உயர்வாக அமர்த்தி வைத்து தன் வழியில் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று மட்டும் மதியம் வரை சிந்தித்து இருந்தவளுக்கு அவனுடைய கடந்த காலத்தை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை.
'இவன் எப்படி அப்படி நடந்துக் கொண்டிருக்கலாம்?' என்பதே மனதில் திரும்ப திரும்ப எதிரொலித்து தனக்குள் பொங்குகின்ற ஆவேசத்தை அடக்க முடியாமல் அதை அப்படியே மறைக்காமல் அவனிடம் வெடிக்கவும் செய்தாள் அட்சயா.
- part to be continued on www.deepababuforum.com
ESTÁS LEYENDO
பூஜைக்கேற்ற பூவிது!
Ficción Generalபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...