"என்ன அண்ணா பிரச்சினை? எனக்காக எதுவும் வருந்திக் கொண்டு தயங்காதீர்கள், உண்மையை சொல்லுங்கள்!" என்று வற்புறுத்தினாள் அருந்ததி.
"ஹும்... என்ன தான் வருத்தம் என்றாலும் எவ்வளவு தான் தயங்கினாலும் உன்னிடம் இதை நான் சொல்லி தான் ஆக வேண்டும்!" என்றான் ரிச்சர்ட் விரக்தியுடன்.
அவள் குழப்பத்துடன் இமைக்காது அவன் முகத்தையே பார்த்திருக்க, அவனோ சுவற்றை வெறித்த வண்ணம் சில நாட்களாக தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை காரண காரியத்தோடு விளக்கினான்.
அதைக் கேட்டவளின் முகம் ஏமாற்றத்திலும், ஏக்கத்திலும் விழுந்து விட, சில நிமிடங்களே என்றாலும் அவனுடன் இணைந்து தானும் அதற்காக வருந்தியவள் சட்டென்று சுதாரித்து நிமிர்ந்து அவன் முகத்தை கூர்ந்து நோக்கினாள்.
வேதனையின் சுவடுகள் படர்ந்திருக்க தன் கம்பீரத்தையும், கலையையும் தொலைத்திருந்த அவன் முகம் இவள் மனதை தெளிவாக்க உதவியது.
இவ்வீட்டிலிருந்து தன்னை அநாதையாக விடுதிக்கு அனுப்ப சற்றும் விருப்பமில்லாமல் காலத்தின் கட்டாயத்தால் ரிச்சர்ட் செய்திருக்கின்ற ஏற்பாடுகளை தானே மனமுவந்து ஏற்றுக் கொள்ள தயாரானாள் அருந்ததி.
.
."ஸாரி... நான் வந்து கொண்டிருக்கிறேன், ஜஸ்ட்... பிப்டீன் மினிட்ஸ். நான் ரிச்சர்ட்... நீங்கள்?"
"ஐ ஆம் கருண் சித்தார்த்!" என்றான் இவன் நிதானமாக.
(ஹேய்... சர்ப்ரைஸ் ஓப்பன்ட் 💃💃💃)
______________________________________
எங்கே விசில் சத்தம் என் காதை எட்டவில்லை...🔊🔊🔊 கருண் ரசிகர் மன்ற தலைவிகளே, செயலாளர்களே மற்றும் அனைத்திந்திய மன்ற செயற்குழு உறுப்பினர்களே இதெல்லாம் பத்தாது. ஒழுங்காக எனக்கு வரவேண்டிய கமென்ட்ஸ் எல்லாம் வரவில்லை எனில் நம் கருண் குட்டியையும் அவன் குடும்பத்தையும் இந்த கதையிலிருந்து கட் பண்ணிடுவேன்... பீ கேர்ஃபுல்! 😎😎😎
-Part to be continued on...
http://deepababuforum.com/poojaiketra-poovithu-15-deepababu/
Simply use this link on address bar
(or)
Those who want to get the direct link of this story chapters pls go and like my facebook page deepababu forum. ☺☺☺️
KAMU SEDANG MEMBACA
பூஜைக்கேற்ற பூவிது!
Fiksi Umumபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...