இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.
______________________________________
"கருணின் மேலும், உங்கள் குடும்பத்தினரின் மேலும் அருந்ததிக்கு இருந்த ஆர்வம் அவள் பேச்சிலும், விழிகளிலுமே வெளிப்பட்டு விட்டது. எனக்கு அது வியப்பை தந்தாலும் உங்கள் அனைவரை பற்றியும் முதலில் நான் தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவளிடம் எதையும் மேற்கொண்டு விசாரிக்காமல் அவள் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டேன்!" என்ற ரிச்சர்டை பார்த்து சின்ன தலையசைப்புடன் புன்னகைத்தாள் சிந்துஜா.
"மறுநாள் காலை அருந்ததியை அழைத்து வர விடுதிக்கு சென்றிருந்தப் பொழுது அவள் முகம் மிகவும் பொலிவு இழந்து காணப்பட்டது. இரவில் நன்றாக அழுதிருக்கின்றாள் என்பதை அவளின் சோர்ந்த லேசாக இமை வீங்கிய விழிகளே காட்டிக் கொடுத்ததால் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் காரணம் புரிந்ததால் அமைதியாகி விட்டேன். ஆறுதல் சொல்ல தோன்றினாலும் எவ்வித உத்திரவாதமும் இல்லாத உறவிற்கு நான் எப்படி உறுதிமொழி கொடுப்பது என்று கவலையாக இருந்தது!"
"ஏன்? ஓ... நீதான் சொன்னாயல்லவா எங்கள் குடும்பம் பற்றி தெரியாமல் அவளுக்கு எப்படி உறுதி கொடுப்பது என்று விட்டு விட்டாயோ?"
"அது மட்டும் காரணமில்லை ஆன்ட்டி... அறைக்கு சென்று தனிமையில் உறங்கும் வரை கற்பனையில் மிதந்தவளுக்கு தன் நிலைமை புரியவும் தன்னிரக்கத்தில் வேதனைக் கொண்டாளே அதையும் யோசித்து தான் நான் எதுவும் கூறவில்லை!"
"புரிகிறது... அருந்ததிக்கு ஏதோ பிரச்சினை என்று சொன்னாய் அல்லவா? முதலில் அதை என்னவென்று விவரமாக கூறு. எங்களுக்கு அது தேவையில்லை என்றாலும் என் வீட்டிற்கு வாழ வந்தப் பெண் எதை நினைத்தும் உள்ளுக்குள் மறுகாமல் நிம்மதியாக வாழ வேண்டும்!" என்றவளை மரியாதையோடு நோக்கியவன் சிறிய பெருமூச்சின் பின்னே அருந்ததியை பற்றி கூற ஆரம்பித்தான்.
"பிறந்ததிலிருந்தே சரியான குடும்ப அமைப்பில் வளராமல் பாசத்திற்காக ஏங்கி கொண்டிருந்த குழந்தைக்கு பன்னிரண்டு வயதில் அதற்கு மேல் சோதனை காலம் தொடங்கி விட்டது. சிறுமி என்றும் பாராமல் தாயின் நடத்தையை வைத்து தன்னை துரத்தும் மிருகங்களிடம் இருந்து உயிரினும் மேலான மானத்தை காக்க வேண்டி அச்சத்துடன் ஓடிக்கொண்டிருந்தவளை தான் என் வீட்டில் வேலை செய்த பெண்மணி உதவிக்கு என்று அழைத்து வந்தார். பிறகும் தனக்குள் ஒடுங்கிப் போயிருந்தவளை என்னுடைய வீட்டில் தங்க அனுமதித்த நம்பிக்கை துரோகி தான் எனக்கு வெளிச்சம் போட்டு காட்டினான்!" என்றான் ரிச்சர்ட் வெறுப்புடன்.
- Part to be continued on www.deepababuforum.com
YOU ARE READING
பூஜைக்கேற்ற பூவிது!
General Fictionபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத...