🌺49🌺

582 9 12
                                    

இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.

______________________________________

மறுநாள் சித்துவின் வீடு மொத்தமும் இரு குடும்ப உறுப்பினர்களாலும் கலை கட்டியிருந்தது.

விருந்து தயாரிப்பதில் வீட்டின் மூத்த பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்க, இங்கே இளைஞர்கள் பட்டாளம் சித்தார்த்தோடு இணைந்து பாட்டும், கும்மாளமுமாக அமளி துமளி செய்து கொண்டிருந்தனர். வீட்டின் வாண்டுகளோ அச்சூழ்நிலைக்கு மகுடம் சூட்டுவது போல் நடனத்தில் கலக்கி கொண்டிருந்தனர்.

ரிச்சர்டுக்கு மனம் வெகு அமைதியாக இருந்தது. தான் எண்ணிய காரியம் அனைத்தும் நல்லவிதமாக கை கூடியதில் பெரும் மகிழ்ச்சியில் இருந்தான்.

கிடைத்த தனிமையில் சுற்றிலும் பார்வையை சுழற்றி யாருமில்லாததை உறுதி செய்து கொண்ட அட்சயா, "டேய் கருண்... உன்னுடைய ஆள் அருந்ததியிடம் நான் நல்லவளாக நடந்துக் கொள்ள வேண்டுமா அல்லது வில்லியாக நடந்துக் கொள்ளட்டுமா?" என்று தீவிரமாக வினவினாள்.

சமையலுக்கு தேவை என்று ஏதோ பெரிய பாத்திரத்தை லாப்டில் இருந்து எடுத்து தரச்சொல்லி சிந்து கேட்டிருக்க, அதை எடுக்க வேண்டி அம்மாவின் அறைக்கு வந்தவன் திடுக்கிட்டு திரும்பினான்.

"என்ன?" என்றவன், "முதலில் இதைப் பிடி!" என்று அவள் கையில் பாத்திரத்தை கொடுத்து விட்டு நிதானமாக ஸ்டூலில் இருந்து கீழிறங்கினான்.

"என்ன சொன்னாய் நீ? உனக்கு அவ்வளவு திமிரா... அவள் முகம் மட்டும் உன்னால் எதுவும் வாடட்டும் அப்பொழுது இருக்கிறது உனக்கு!" என மிரட்டியபடி அவள் காதை திருகினான்.

ஆ... என்று முனகியபடி கையில் இருந்ததை அருகிலிருந்த கட்டிலில் போட்டவள், பட்டென்று அவன் கையை தட்டிவிட்டு காதை தேய்த்துக் கொண்டாள்.

"மூளையில்லாத நாயே... சொல்ல வருவது ஏதாவது புரிகிறதா பார், உன்னிடம் போய் சுற்றி வளைத்து புதிராகப் பேச வந்தேனே... என்னை தான் டாஷ் டாஷேலேயே அடித்துக் கொள்ள வேண்டும்!" என பொரிந்தவள், பாத்திரத்தை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினாள்.

வேகமாக குறுக்கே வந்து அவளின் வழியை மறைத்தவன், "என்ன சுற்றி வளைத்துப் பேசினாயா? அப்படியென்றால்..." என குழப்பத்துடன் வினவினான்.

அவனை முறைப்புடன் ஏறிட்டவள், "ம்... வில்லியாக நடந்து சட்டுபுட்டென்று அவளுக்கு கல்யாணம் முடித்து வீட்டை விட்டு அனுப்பலாமா என்று யோசித்தேன். வேண்டாம்... நீதான் என் காதை வலிக்க திருகி விட்டாயே, சோ... ரொம்ம்ம்பவும்... நல்லவளாக நடந்து என் நாத்தனாரை நானே கண்ணுங்கருத்துமாக கவனித்து என் வீட்டிலேயே சொகுசாக வைத்துக் கொள்கிறேன்!" என அவனிடம் பழிப்பு காண்பித்து தோளில் நொடித்துக் கொண்டு அவனை தாண்டிச் சென்றாள்.

அதிர்ந்து விழித்தவன், "ஏய்... நீ இப்படி என்று முன்னமே தெளிவாக..." என வேகமாக அட்சயாவை பின் தொடர்ந்தவன், எதிரே சித்து வரவும் சட்டென்று முகத்தில் புன்னகையை பூசிக் கொண்டு வழிந்தான்.

முன்னே தன்னிடம் கண்ணடித்து செல்பவளை குழப்பத்துடன் கவனித்து விட்டு புருவம் சுருக்கி தன் மகனை ஆராய்ந்தவன், "என்னடா ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்றான்.

-part to be continued on www.deepababuforum.com

Hi Readers!

Kathai thiruttai kuraikkum vithamaga ini online il kathai veliyiduvathil sila maatrangalai kondu vanthirikkirom. TV serialgal pola indru post seiyum update anthantha kathaigalin adutha update varaiyil mattume thalaththil vaithiruppom. Adutha update podum poluthu munnathai neeki viduvom. So ungalukku kathaigalai mulu novel aaga naangal puthakangal vaayil aagavo allathu Kindle ebooks aagavo thaan kudukka iyalum. Matrapadi ungalukku thodarnthu yengalin padaippugal pakuthi vaariyaga online il koduppathil yentha maatramum illai. Ungalin aatharavu yengalukku nitchayam thodarnthu kidaikkum yengindra nambikkaiyil immuraiyai kaiyil yeduthirukkindrom. Thank u friends.

-Deepababu

பூஜைக்கேற்ற பூவிது!Where stories live. Discover now