🌺43🌺

308 14 10
                                    

இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல் வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.

______________________________________

"ஹாய்!" என்றவாறு அறையினுள் நுழைந்த ரிச்சர்டை இயல்பாக ஏற இறங்க பார்த்த அட்சயா, முகத்தில் எவ்வித பாவனையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக பேச ஆரம்பித்தாள்.

"அப்புறம்... உங்களுக்கு என்ன கம்ப்ளைன்ட்?" என்று அவனுடைய பைலை கையில் எடுத்தாள்.

"இல்லை... நான்..."

"ஓ... கிட்னில ஸ்டோன் ஃபார்ம் ஆகி இருக்கிறதா? சரி இந்த காட்டில் ஏறி படுங்கள், பிரச்சினை என்னவென்று ஸ்கேன் பண்ணி பார்த்து விடலாம்!"

"என்ன? ஏய்..."

"ப்ச்... இந்த நர்ஸ் எங்கே போனார்கள்? ரிப்போர்ட் எழுத வேண்டாமா?" என கேஷுவலாக வினவியபடி கைகளில் கிளவ்ஸை மாட்டினாள் அட்சயா.

உண்மையில் ரிச்சர்ட் தான் அதிர்ந்துப் போனான், 'என்ன இது? நான் இங்கே வந்ததற்காக முறைக்கப் போகிறாள், கத்தப் போகிறாள் என்று பார்த்தால்... இவள் இப்படி செய்கிறாளே?' என ஒரு நிமிடம் அவளை மலைப்புடன் பார்த்தான்.

விழி உயர்த்தி அவனை பார்வையால் கூறு போட்டவள், "ம்... என்ன இது நீங்கள் இப்படியே நின்றுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? நாங்கள் அடுத்த வேலையை பார்க்க வேண்டாமா?" என்றாள் அதிகாரமாக.

பதிலுக்கு அவளை நேராக நோக்கியவன் மார்பின் குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு, நீ எவ்வளவு தூரம் தான் செல்கிறாய் என நானும் பார்க்கிறேன் என்பது போல் அழுத்தமாக நின்றான்.

சட்டென்று முகத்தை சுளித்தபடி வேறுபுறம் திரும்பிக் கொண்டவள், "எதற்காக இப்படி எல்லாம் பொய் சொல்லிக் கொண்டு இங்கே வருகிறீர்கள் நீங்கள்?" என்றாள் எரிச்சலுடன்.

"முதலில் உன்னை தேடி எங்கே யார் வந்தாலும் அவர்களை உட்கார சொல்லி விட்டு பேச்சை ஆரம்பிக்கும் பழக்கத்தை கொண்டு வா!" என்று அவன் குற்றஞ்சாட்டியதும் தான் தன் தவறை உணர்ந்து முகம் கன்றியவள், ஷிட்... என நெற்றியை தட்டிக் கொண்டு, "ஐ ஆம் ரியலி சாரி, ப்ளீஸ் உட்காருங்கள்!" என்றாள் தன்மையாக.

தாங்க்ஸ் என்ற முணுமுணுப்புடன் எதிரே அமர்ந்தவனின் முகத்தில் தென்பட்ட லேசான இறுக்கம் அவள் இதயத்தை சோர்வடைய செய்ய அவனை கவலையுடன் நோக்கினாள் அட்சயா.

"நான் எதையும் வேண்டுமென்றே செய்யவில்லை, நீங்கள் திடீரென்று என்னை சந்திக்க வேண்டி குறுக்குவழியில் ஏமாற்றி வரவும் எனக்கு கோபம் வந்து விட்டது!" என்று தன் செயலுக்கு விளக்கம் அளித்தாள்.

ஹும்... என இதழ் வளைத்தவன் அவள் விழிகளை நேராக நோக்கி, "டோன்ட் வொர்ரி... உனக்கு பிடிக்காததை எதுவும் நான் வற்புறுத்த வரவில்லை. சொல்லப் போனால் உனக்கு வசதியாக தான் ஒரு விஷயத்தை பேச வந்திருக்கிறேன்!" என்றவனின் பார்வையில் தீவிரம் தெரிந்தது.

'எனக்கு வசதியாக என்றால்... திருமணத்தை தடுப்பது பற்றியா?' என்கிற திகைப்பு அவள் உள்ளத்தில் எழாமலில்லை.

- part to be continued on www.deepababuforum.com

பூஜைக்கேற்ற பூவிது!Tempat cerita menjadi hidup. Temukan sekarang