🌺32🌺

344 17 5
                                    

இதோ மேலே இருக்கும் youtube வீடியோவில் ரைட் கார்னர் settings அருகில் உள்ள  YouTube வார்த்தையை ஜஸ்ட் கிளிக் செய்து Watch on Youtubeல்  வீடியோவை பார்க்கும் பொழுது கீழே இந்த நேரடி அத்தியாயத்திற்கான லிங்க் கொடுக்கபட்டிருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ரெண்டே ரெண்டே க்ளிக்கில் அழகாக படித்து மகிழ்வீர்களாம்.

______________________________________

சந்திரா இறுக்கமாக அமர்ந்திருக்க, "ஆன்ட்டி... நீங்களும் ஒரு பெண்ணை பெற்றவர், ஒரு அம்மாவின் இடத்தில் இருந்து அந்த அபலைப் பெண்ணின் நிலையை கொஞ்சம் சிந்தியுங்கள். ஒழுக்கம் தவறிய தாயின் வயிற்றில் பிறந்ததை தவிர வேறு எந்த தவறும் அந்த குழந்தை செய்யவில்லை. பிறந்ததிலிருந்து அவளுடைய அம்மாவை காரணம் காட்டி சமூகத்தில் இருந்து அவள் ஒதுக்கப்பட்டாள். சிறுமி என்றும் பாராமல் பன்னிரண்டு வயதிலிருந்தே... ப்ச்... அது உங்களுக்கே புரியும். அந்த வயதில் உங்கள் பெண் பாதுகாப்பாய் குடும்பத்தினரின் அரவணைப்பில் இருந்திருக்க, அந்த பாக்கியம் கிடைக்காத அருந்ததி அந்நேரத்தில் தன்னை தற்காத்துக் கொள்ளவென்று எவ்வாறு எல்லாம் தவித்து இருப்பாள், போராடி இருப்பாள் என எண்ணிப் பாருங்கள். அவளை பெற்றவள் மோசமானவள் என்பதற்காக அவளும் அப்படித்தான் இருப்பாளா என்ன? குழந்தை என்றும் பாராமல் மிருகங்களாக மாறி வக்கிரத்துடன் அவர்களை சீரழிக்கும் உலகில் பள்ளிச் சிறுமியை அநாதையாக தெருவில் விட்டதே பெரிய குற்றம். இதில் அவள் கௌரவமாக வாழ்வதை கேலி செய்து சீண்டிப் பேசினால் அவளும் பெண் தானே அவளுக்கென்று உணர்வுகளும், வேதனைகளும் இருக்காதா என்ன சொல்லுங்கள்?" என்று ஆதங்கத்துடன் வினவினான் ரிச்சர்ட்.

சில நிமிடங்கள் தரையை வெறித்தவர், "உங்கள் பெயர் என்னப்பா சொன்னீர்கள்?" என்றார் அவனிடம் நிமிர்ந்து.

"ரிச்சர்ட்!"

"ம்... இந்த விஷயம் பேச ஆரம்பிக்கும் முன்னே எதற்காக மீராவை உள்ளே போக சொன்னாய்?"

அவர் ஒருமையில் விளிப்பதை கவனித்தபடி, "பெரும்பாலும் சிறியவர்களின் மனநிம்மதிக்காக இதுபோன்ற கேவலமான விஷயங்களை பெரியவர்கள் அவர்கள் காதில் போட்டு வைக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம். என்னால் உங்கள் குடும்ப அமைதி எந்த விதத்திலும் குலைந்து விடக்கூடாது என்பதற்காக தான் மீராவை உள்ளே போக சொன்னேன்!" என்றான்.

ஓ... என மெச்சுதலாக இதழை வளைத்தவர் அவனுடைய குடும்பத்தினரை பற்றி விசாரித்து விட்டு ஆவேசமாக தன் கணவனிடம் திரும்பினார்.

"கேட்டீர்களா... இவன் ஆண்பிள்ளை, எவருடைய கட்டுப்பாடும் இன்றி தன்னந்தனியாக வீட்டில் வசித்தாலும் சுய ஒழுக்கத்தோடு, குடும்ப கௌரவத்தையும் காப்பாற்றி வருகிறானே இவன் தான் ஆண்பிள்ளை. மனைவி, குழந்தைகள், குடும்பம் என்று சுற்றி அனைவரும் இருக்கும் பொழுது வைப்பாட்டியை தேடிச் செல்கிறவன் ஆண்பிள்ளையே இல்லை!" என சவுக்கடி கொடுத்தார்.

- part to be continued on www.deepababuforum.com

பூஜைக்கேற்ற பூவிது!Where stories live. Discover now