🌺8🌺

1.5K 31 7
                                    

"என்னடா அப்படியே ஷாக் ஆகி நிற்கிறாய்? சிறுவயதுப் பெண் என்கவும் என்னிடமிருந்து மறைத்து நீ மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து விட்டாயோ... ஆனால் உனக்கு விஷயமே தெரியவில்லை, இவள் உன்னிடம் வருவதற்கு முன்பே என்னிடம் சிக்கியவள். என்னவொன்று சின்னப்பெண் தானே என்று சுதாரிப்பாக இல்லாமல் இருந்து விட்டேன், ஏமாந்த நேரமாகப் பார்த்து என் கையை கடித்துவிட்டு ஓடிவந்து விட்டாள். அதனால் தான் எனக்கு முன்பாக நீ முந்தி விட்டாய், இட்ஸ் ஓகே... பரவாயில்லை, இவள் என்ன காதலியா? நீ முதல் நான் முதல் என சண்டைப் போடுவதற்கு... இவள் ஒரு வேசி தானே... ஷ்... ஆ..." என்று கத்தியவனின் உதட்டிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.

அவளை தன்னுடைய தங்கை என வெளிப்படையாக யாரிடமும் பகிரா விட்டாலும் அந்த எண்ணத்தை தன் நெஞ்சிலே உரமேற்றி அடைக்காத்து வந்திருந்தவனுக்கு கைகள் கட்டப்பட்ட நிலையில் அவளை கண்டவுடனேயே உடலும், உள்ளமும் ஒருசேர தீப்பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. மேலும் பள்ளி செல்கின்ற வயதில் உள்ள சிறுப்பிள்ளையென்று பாராமல் அருந்ததியை தன்னுடன் இணைத்துப் பேசியது மட்டுமின்றி அவளை வேசியென்று ராக்கேஷ் குறிப்பிடவும் ஆக்ரோஷத்தின் உச்சாணிக்கு சென்ற ரிச்சர்ட் கண்மண் தெரியாமல் அவனை அடித்து துவைக்க ஆரம்பித்தான்.

"யூ... ராஸ்கல்... ப்ளடி பிட்ச்... பொறுக்கி நாயே... உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால்... என் முன்னாலேயே என் வீட்டுப்பெண்ணை கேவலமான முறையில் மதிப்பிட்டுப் பேசுவாய்? அதுவும்... அவளை கட்டிப்போட்டு..." என்றவனுக்கு உணர்ச்சி வேகத்தில் அதற்கு மேல் வார்த்தைகள் பிரசவிக்க மறுக்க, விழிகள் கலங்க தன் இயலாமையை அவன் மேல் சரமாறியாக இடியாக இறக்கினான் ரிச்சர்ட்.
______________________________________

ஹாய் சகோக்களே!

இந்த இடத்தில் இக்கதையின் கூற்றை உங்களுக்கு தெளிவுப்படுத்தினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய சமுதாயத்தில் குறிப்பிட்ட விகித்தனர் அது மூத்தவர்களோ அல்லது இளையவர்களோ, உறவினர்களோ அல்லது நட்புக்களோ யாராக இருந்தாலும் வயதுவரம்பின்றி பெண்ணினத்தை நோக்கும் பார்வையே மிகவும் கீழ்த்தரமாக மாறியிருக்கிறது.

பூஜைக்கேற்ற பூவிது!Where stories live. Discover now