அத்தியாயம் : 01

5.9K 94 7
                                    

பூஞ்சோலையின் நடுவே இரண்டு மாடிக் கட்டிடங்களோடு அழகாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது "கண்ணன் இல்லம்"என்று பெயர் தாங்கிய அந்த வீடு...பார்ப்பவர் கண்களிற்கெல்லாம் குளிர்மையைப் பரிசளித்து வெளிப்புறத்திற்கு பிருந்தாவனமாய் தோற்றமளித்தாலும் உள்ளகத்தில் மட்டும் ஏனோ சோககீதத்தைத்தான் இசைத்துக் கொண்டிருந்தது அந்த இல்லம்... 

அதற்கு ஒரேயொரு காரணம் அந்த இல்லத்தின் மைந்தன் கார்த்திக் கிருஷ்ணன்...ராம்குமார் சீதா தம்பதிகளின் ஒரே புத்திரன் அவன்...முப்பது வயதாகியும் திருமணத்தை மறுத்துக் கொண்டே வருகிறான் என்று சொல்வதை விடவும்,அந்த பந்தத்தையே முற்று முழுதாய் வெறுத்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்... 

அவனது பெற்றோர்களும் அவனோடு இந்த ஐந்து வருடங்களாய் எப்படி எப்படியெல்லாமோ போராடிப் பார்த்துவிட்டார்கள்...ஆனாலும் அவன் அவர்களின் பேச்சுக்களிலோ,கண்ணீரிலோ கரையாத கல் நெஞ்சுக்காரனாகவே இருந்து வைத்தான்... 

படிப்பை முடித்ததுமே அப்பாவின் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டவன்,தனது கடின உழைப்பினாலும்,விடாமுயற்சியினாலும் பல்வேறு துறைகளில் கால்பதித்து...ஒரே வருடத்திலேயே இளம் தொழிலதிபராக உருவெடுத்திருந்தான்...இன்று ஆர்.கே குரூப் ஒவ் கம்பனிஸின் உரிமையாளனான அவனை அந்தத் தலைநகரத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...அந்தளவிற்கு அவன் தனது தொழிலில் வெற்றிக் கொடியை நாட்டியிருந்தான்... 

அவனைப்பற்றிய அறிமுகம் நடந்து கொண்டிருக்கும் போதே படிக்கட்டுகளில் கழுத்துப்பட்டியைச் சரி செய்தவாறு கம்பீரமாக இறங்கி வந்து கொண்டிருந்தான் அவன்...ஆறடி உயரத்தில் ஆணழகனாகவே காட்சியளித்தவன்,வசீகரமான முகத்தில் புன்னகைக்குப் பதில் சினத்தினைக் குடி வைத்திருந்தான்... 

அவன் படிகளில் இறங்கி வருவதையே சிந்தை தேங்கிய முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் கார்த்திக்கின் அப்பா ராம்குமார்..அவருக்கு எதிராகவே அவன் உணவு மேசையில் வந்து அமரவும்,இத்தனை வருடங்களாய் அவனோடு வாதாடித் தோற்றுப்போன விடயத்தை இப்போதும் விடாது ஆரம்பித்து வைத்தார்... 

அவனும் நானும்Where stories live. Discover now