அத்தியாயம் : 17

1.1K 37 8
                                    

சௌமியின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் வெகுவாகவே காயப்பட்டுப் போனவள்,அன்றைய இரவு முழுவதுமே அதையே மீண்டும் மீண்டுமாய் நினைத்து நினைத்து கண்ணீரினால் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தாள்...அவளது உடலும் உள்ளமும் இந்த நிகழ்வினால் மிகவும் சோர்ந்து போனதாலோ என்னவோ அதிகாலையில் அவளின் உடல் உயர்  கொதிநிலையினை அடைந்திருந்தது...

காய்ச்சலின் தாக்கமும்,மனதில் குடியிருந்த கவலையும் அவளை ஒருசேரத் தாக்கியதில் மிகுந்த பலவீனத்திற்குள்ளானவளிற்கு வைத்தியரிடம் சிகிச்சை எடுத்தும் கூடக் குணமாகவில்லை...உடலில் தோன்றும் வலிகளுக்குத்தானே மருந்திட்டிட முடியும்..உள்ளத்தில் தோன்றிடும் வலிகளுக்கல்லவே...

இதற்கு முன் அவள் இப்படி காய்ச்சலென்று படுத்துக் காணாத அவளின் பெற்றோர்கள்தான் துடிதுடித்துப் போய்விட்டார்கள்...என்னதான் அவளை ஒருவர் மாறி ஒருவர் அருகிலிருந்தே கவனித்துக் கொண்டாலும் அவள்தான் தேறி வருவதாகவேயில்லை...ஆனால் அவளின் இந்த சுகவீனம் கூட ஓர்விதத்தில் நல்லதாகவே அவளிற்கு அமைந்தது...

மூன்று நாட்களாக அவள் கல்லூரிக்கு வராததால் அன்று அவளைத் தேடி வீட்டிற்கே வந்திருந்தாள் சௌமி...

"வாம்மா...உட்காரு...நல்லாயிருக்கியா...??.."

"நான் ரொம்பவே சூப்பரா இருக்கேன் மா...ஆனால் கீர்த்து எங்க..??..மூனு நாளாய் ஆளைக் காணவேயில்லை...கோல் பண்ணால் போனும் சுவீட்ச் ஆப்ன்னு வருது...வீட்டு நம்பருக்கும் லைன் கிடைக்கல...அதான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்திட்டு நேராவே வந்திட்டேன்...எங்கே அவள்..??..வீட்டில இருக்காளா இல்லையா...?..."என்று அவள் இடைவேளையின்றி பேசிக் கொண்டே செல்லவும்,

"அது சரி...கொஞ்சம் என்னையும் பேச விடும்மா...அப்போதானே என்னாலேயும் என்ன ஏதுன்னு சொல்ல முடியும்.."

"ஹா..ஹா...மன்னிச்சிருங்க மா...இனி நான் வாயையே திறக்க மாட்டேனாக்கும்.."என்றவாறே அவள் இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொள்ளவும்,அவளது குறும்பில் புன்னகைத்தவர்...சிரிப்பு லேசாய் அடங்கியதும் விடயத்திற்கு வந்தார்...

அவனும் நானும்Where stories live. Discover now