07

10.5K 274 71
                                    

உன்னை போல யாரும்
என்னை தாண்டி போனால் 
உன்னை நினைப்பேன் 
உந்தன் ஆசை முகம் 
பார்த்து கிடக்கத்தான்  
உயிரை சுமப்பேன் 
நெருங்கவும் இல்லை 
விலகவும்  இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை...காதல்
தொடக்கமும் இல்லை 
முடிவுகள் இல்லை 
கடவுளை போலே...காதல்

கதவைத் திறந்து கொண்டு அந்த விஸ்தீரமான அறையின் உள்ளே நுழைந்ததுமே அன்று அவனை கடந்து செல்லும் போது அவள் உணர்ந்த பிரத்யேகமான பர்ப்யூம் வாசனை முகத்தில் மோதியது..கண்களை மூடி ஆழ மூச்செடுத்து அவ் வாசனையை தன்னுள்ளே நிறப்பிக் கொண்டாள்.
உள்ளமெங்கும் ஓர் கிளர்ச்சி ஊடுருவ கண்களை திறந்தாள் அவள் எதிரே இருந்த சுவர் முழுதாக அடைத்துக் கொண்டு மிகப்பெரிய வோள் ஸ்டிக்கரில் படு ஸ்டைலாய் அவன் வந்து கொண்டிருந்தான்.

அது ஏதோ ஓர் இரோப்பியன் கன்ட்ரி லொகேஷனாய் இருக்க வேண்டும். இரு புறமும் கட்டுக்கள் வைத்து அமைக்கப்பட்ட அகன்ற பாலமொன்றின் நடுவே நடந்து வந்து கொண்டிருந்தான்.
ஒரு கையில் கோர்ட்டினை தோளிற்குப் பின்புறமாய் பிடித்தபடி மற்றைய கை ட்ரவுசர் பாக்கெட்டினுள் பதுங்கியிருக்க ஒரு பக்கமாய் திரும்பி லேசாய் சிரித்தபடி க்ரீம் கலர் சூட்டும் ப்ரவுன் ஷர்ட்டுமாக முன் நெற்றி முடி  காற்றில் அலை மோதிக் கொண்டிருக்க கண்களுக்கு கூலர்ஸ் இயல்பாய் பொருந்தியிருந்தது.

ப்ப்பாஹ்...வாட் எ ஹான்ட்ஸம்...அநியாயத்துக்கு அழகாய் இருந்து தொலைக்கறானே..எப்படி இப்படி ஒரு மேன்லியாக இருக்க முடியும்...தன் போனை எடுத்தவள் அந்த வோள் போட்டோவை அப்படியே தன் காமிராவில் காப்சர் செய்து கொண்டாள்...என்னமாய் இருக்க தலைவா...சிலாகித்தபடி தன் போனில் இருந்த போட்டோவுக்கு ஒரு இச்...கொடுத்தாள். பார்வையை திருப்ப அங்கே அழகாய் விரிப்பு விரிக்கப்பட்டு உயர்ரக கட்டிலும் மெத்தையுமாய் தோரணையாய் காட்சி தந்தது. அதன் எதிரே பிப்டிபைவ் இஞ்ச் நவீன ரக டீவி ஒன்று மாட்டப்பட்டிருந்தது. சற்றுத் தள்ளி
இருந்த அழகிய மர வேலைப்பாடுடன் கூடிய ஷெல்பில் கீழ் பகுதி முழுவதும் புக்ஸ் அடுக்கப்பட்டிருக்க அதன் மேற்பகுதியில் மீண்டும் அவன் புகைப்படங்கள்.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now