08

11.2K 272 85
                                    

ஏனோ ஏனோ என்னை
பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக்
காணத்தானா யுகம்தோறும்
காத்துக் கிடந்தேனா..!!?

ம்ம்...பாடு ஜோதி பாடு உன் இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்த என்னை...சாரி சரசுவும் இருக்கல்ல...எங்களை ஏமாற்றி விடாதே..குணவர்த்தன் செந்தமிழ் பேச

வேண்டாம் குணா வேண்டாம்
கானமழை பாய்ந்து நிரம்பியோடும் காதினிலே என் கீதத்தை ஊற்றி புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள் கோபால்...சாரி சாரி புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள் குணா...ஜோதியும் சரோஜா தேவி பானியில் பேச சரசு வெடித்துச் சிரித்தாள்.

லேசாய் கதவை தட்டிவிட்டு விஷ்ணு உள்ளே வர அவன் பின்னோடு வெற்றியும் வந்தான்..அதுவரை வாயடித்துக் கொண்டிருந்த ஜோதி கப்பென வாயை மூடிக் கொண்டு அமைதியாய் நின்று விட வாங்க சின்னவரே..காபி குடிக்கறீங்களா கொண்டு வரட்டுமா..இல்ல சரசு..நோ தாங்க்ஸ்.தாத்தா ஹவ் ஆர் யூ... நோ நோ ரெண்டு பொண்ணுங்களை வச்சிட்டு தாத்தா நாட் அலாவ்ட்டா பையா கால் மீ குணா...உன் பாட்டிக்கு அப்றமா நம்ம ஜோதிதான் அப்டி கூப்டுது..தாத்தாவின் கலகல பேச்சில் விஷ்ணுவிற்கு மன நிறைவாய் இருந்தது.

கம்பீரமாய் இருந்தவர் இப்படியான பின் தன்னிரக்கத்தில் மன வலிமை இழந்திருந்தார்..அவ்வப்போது கலகலப்பாய் பேச முயன்றாலும் மனதளவில் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது தாத்தாவின் முகத்திலிருப்பது முழுதாய் உற்சாகமும் மகிழ்ச்சியும்.நன்றியுடன் அவன் ஜோதியை பார்க்க அவள் பயத்துடன் பார்வையை தரைக்குள் புதைத்துக் கொண்டாள்.
அங்குமிங்குமாய் உருண்ட கருமணிகள் அவளின் தவிப்பை காட்டியது.

இந்தப் பொண்ணு ஜோதி செம்மையாய் பாடுமாம்...கல்சுரல்ஸ் ல எல்லாம் பர்ஸ்ட் ப்ரைஸ்னு சொல்லிச்சு...சரி ஒரு பாட்டுப் பாடுன்னா மாட்டேன்னு அடம் பிடிக்குது...தாத்தா கம்ப்ளைன்ட் பண்ண அதென்னம்மா கல்சுரல்ஸ் ல பர்ஸ்ட் ப்ரைஸ்னு பெருமை பீத்திக்கறது...அப்றம் பாடுன்னா பாவ்லா பண்ட்ரது..வெற்றியின் கேள்வியில் ஜோதிக்கு பற்றிக் கொண்டு வந்தது.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now