31

11.1K 291 161
                                    

ஒருவன் ஒருவன் விழியின் வழியே
எனக்குள் உதித்தான் எதற்காகவோ
மனவயலில் நினைவு விதை
அவன் தூவிட தூவிடப் பார்த்தேனே
உள்நாடி எங்கும் உற்சாக மேளம்
பொங்காமல் பொங்கி பாய்ந்தோட
மேல் மூச்சு கொஞ்சம்
கீழ் மூச்சு கொஞ்சம்
வாங்காமல் வாங்கி நான் வாட
இன்பமோ துன்பமோ
சொல்லத் தோன்றாமல் வாழ்கிறேன்..!!

வெற்றியின் விரல்கள் அவள் கன்னத்தில் உரசியது. காற்று கலைத்துப் போட்டிருந்த கற்றை முடிகளை ஒதுக்கி அவள் காதோரமாய் படியவிட்ட விரல்கள் நிதானிக்க அவள் உடல் சிலிர்த்து நின்றிருந்தாள்.
அவன் பார்வையை அவள் விழிகளுக்குள் ஊடுருவ விட்டு அவளைத் தீ மூட்டிக் கொண்டிருந்தான்.
அவன் விரல்கள் மெதுமெதுவாய் அவள் முகவடிவை அளந்து இதழ்களிலே தேங்கி அவள் உதடுகளை நீவ குறுகுறுத்த அவள் உதடுகள் நடுங்க அவன் விழிகள் அதனை விழுங்கிவிடுவன போல் வெறித்தன.

சில்லென்று உறைந்திருந்த உடலில் அவன் விரல்தடம் சூடுபரப்பியது.. சரசுவுக்கு இன்பமா துன்பமா என விளங்கமுடியா அவஸ்தையில் உள்ளம் தடதடத்தது. விரல்களை அவள் இதழிலிருந்து விலக்கிக் கொண்டவனின் உதடுகள் அவளதை நெருங்க கண்களை இறுக்கமாய் மூடி அவன் இதழ் தொடுகைக்காய் வெதும்பத் தொடங்கியவள் நேரம் கடந்தும் அவளின் எதிர்பார்ப்பு நிறைவேறாததைக் கண்டு மெதுவாய் இமை பிரித்து எதிரே நோக்கினாள்.

எப்போது விலகினான் என்று தெரியவில்லை இவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான். பெரிய பெரிய மூச்சுக்களால் அவன் தன்னை சமப்படுத்த முயல்வதை உணர்ந்தவள் லேசாய் தொண்டையை செருமி பா..பால் கொழுக்கட்டை சாப்டுறீகளா..சூடு ஆறிடப் போவுது..உள்ளே பரவிய ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு இயல்புக்குத் திரும்ப அவளும் முயன்றாள். ஆனால் இருவருக்குள்ளும் மயக்கமும் கிறக்கமும் மிச்சமிருந்தது. அவளின் கேள்விக்கு எதுவும் பேசாது அவன் ஆமோதிப்பாய் தலையசைக்க சமையலறைக்குச் சென்று ஒரு கிண்ணமும் ஸ்பூனும் கொண்டு வந்தவள் அறையின் புறமாய்க் கிடந்த மூன்று பேர் அமரக் கூடிய அந்த நீளமான பிரம்பு சோபாவில் ஓரமாய் அவன் அமர்ந்திருக்க மற்றைய ஓரத்தில் அமர்ந்தாள்.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now