46

12.7K 338 132
                                    

வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா…!!

காரிலிருந்து இறங்கியவர்கள் இவர்களை நோக்கி நடந்துவர ஜோதி.. வெற்றியையும் லஞ்சுக்கு கூட்டி வந்துருக்கேன் சாப்பாடு முடிச்சாச்சு தானே.. கேட்ட வீ வீ ஆரிடம் ஹ்ம்ம் உள்ள வாங்க என்றபடி எழுந்தவளை தொடர்ந்து சரசுவும் எழுந்து நின்றாள். சரசுவின் விழிகளை வெற்றியினது கவ்விக் கொள்ள பார்வையில் பலமான மோதல். சட்டெனத் திரும்பி ஜோவின் பின்னோடு நடந்து உள்ளே சென்று விட்டாள். சமைத்தவற்றை மேசையில் கடை பரப்பிவிட்டு பரிமாறப் போன பெண்களை அவரவர் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற விஷ்ணு கூடவே அமரும்படி சொன்னான். ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமுமாய் எதிரெதிரே அமர்ந்து சாப்பிடத் துவங்கினார்கள்.

தட்டில் சாப்பாட்டை அளைந்தபடி வெற்றி அமர்ந்திருக்க சரசுவும் நிமிர்ந்து பாராமல் குனிந்தபடியே இருந்தாள்.
ஜோதியின் பார்வை இவர்களை அளந்து கொண்டிருக்க வீ வீ ஆர் மட்டும் சாப்பாட்டை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவளுக்கு எரிச்சலாக வந்தது. இவனுக்கும் காதலுக்கும் எட்டு மைல் தொலைவு இருக்கும் போலயே.. அவனை லவ் பண்ணாதான் கண்டுக்க மாட்டேன்றான்.. அடுத்தவங்க லவ்வாச்சும் கண்ணுக்கு தெரியுதா பாரு.. ப்ளேட்டை காலி பண்ட்ரதுலேயே கவனமாருக்கான் ஜடம்.. ஒரு கவளத்தை உள்ளே தள்ளியபடி நிமிர்ந்தவன் இவள் அவனையே பார்த்திருக்கவும் ஸ்டைலாய் புருவங்களை உயர்த்தி என்ன.?? என்பது போல் கேட்டான். தலையை மறுப்பாய் அசைத்தவள் இதுக்கொண்ணும் குறைச்சல் ல்ல.. என்ற முணுமுணுப்புடன் தன் தட்டை கவனித்தாள்.

தீயோ..தேனோ..!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang