56

12.2K 346 205
                                    

ஒரு பிள்ளை எழுதும்
கிறுக்கல்தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி
அலைவதே வேட்கையா
ஒரு கனவு காற்றில் மிதக்குதே
அது மிதந்து கொண்டே சிரிக்குதே
நான் வருவேன் மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன்....!!

அன்னிக்கு எங்கிட்டே கேட்டீங்க நெனவிருக்கா... தன் தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டு அமர்ந்த ஜோதியிடமிருந்து தன் டீ கப்பை வாங்கிக் கொண்டவன் என்ன கேட்டேன் என்றான் அதனை ஒரு சிப் பருகியபடி.
ஷேக்ஸ்பியரோட மை மிஸ்ட்ரஸ் கவிதையை நியாபகப் படுத்தற மாதிரியே அவள் அப்படி ஒன்றும் அழகில்லை சாங்க் இருக்கறதா பாடிக் காட்டிட்டு இதே மாதிரி நிறைய்ய இருக்கு முடிஞ்சா ஒன்னு கண்டுபிடிச்சு சொல்லு பாக்கலாம்ன்னீங்களே...மறந்து போச்சா..?? (Episode - 9)
ம்ஹும் நெனவிருக்கே... மேடம் கண்டுபிடிச்சுட்டீங்க போலருக்கு
ஆமாமா.. கண்டு பிடிச்சுட்டேன்..
எங்க சொல்லு பாக்கலாம்..
சொன்னா என்ன தருவீங்க..
நீ முதல்ல சொல்லு
ம்ஹும் என்ன தருவீங்கன்னு சொல்லுங்க... அப்போதான் சொல்லுவேன்.. சிணுங்கினாள்.
உன்னோட கொளுக் மொளுக் கன்னத்துல டபுள் ஸ்ட்ராங்கா நச்சுன்னு ஒரு இச்ச்.. ரைட்டா.. கண் சிமிட்டினான்.
ஐயே ரொம்ப ராங்க்கா பேசறீங்க
பேசறதென்ன.. செஞ்சே காட்டட்டுமா..
ஒன்னும் வேணாம் நான் சொல்லிர்ரேன்
அப்டி வழிக்கு வரனும்... சரி சொல்லு!!
என்றபடி அவள் முகத்தையே பார்த்தான்.

கலீல் ஜிப்ரான் இருக்காருல்ல..
எங்க உன் பக்கத்து வீட்லயா..
ஷ்ஷ்.... குறுக்க குறுக்க பேசப்டாது.. அவள் கட்டளையிட ஓகே மேடம் அவன் வாயில் கை வைத்து மூடிக் கொண்டான்.
அவரோட ப்ரோக்ன் விங்க்ஸ் படிச்சிருக்கீங்களா...
ஓ எஸ்..மை பேவரைட் ஆல்சோ என்றவனிடம்
அதுல ஒரு லைன் வரும்..
என் காதலியோட கல்லறைப் பக்கமா போற இளைஞர்களே..
அமைதியாக உங்கள் பாதங்களை சத்தமின்றி வைத்துச் செல்லுங்கள்
என் காதலியோட நிம்மதியான தூக்கம்
கலைந்துவிடப் போகிறதுன்னு... என்றாள்.

ம்ம்ம்ம் அழகான கவிதை அது.. அவன் ஆமோதிக்க இதே மாதிரி ஷெல்லி கூட தன்னோட அம்மாக்கு
சப்தமிட்டு நடக்காதீர்கள் இதிலேதான் என்னருமைத் தாயார் இளைப்பாறுகிறார்... னு எழுதியிருக்கார்.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now