52

13.4K 336 91
                                    

இளம் வெயில் தொடாமல்
பூக்கள் மொட்டாக ஏங்கும் பெண்காடு
புது வேர்கள் கை சேர்த்து
பச்சை நீர் கோர்த்து
சூழும் ஏகாந்தம் நீ
கடல் காற்றில் இதயம் தொட்டதே
அதில் உந்தன் பெயரை
அழுத்திச் சொல்லுதே
அலை மடி நீளுதே
அதில் உன்னை ஏந்துதே...!!

அறையின் கதவை மெதுவாய் தள்ளி தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து கண்களை உருட்டித் தேடினாள் சரசு எங்கே.. காணும் ஒரு வேள வெளியில இன்னும் சின்னவரோட பேசிட்டிருக்காகளோ.. இல்லையே வரும் போது பார்த்தேனே சின்னவரு தனியால்ல நின்னுட்டிருந்தாரு.. யோசனையுடன் உள்ளே நுழைந்தவள் அப்போதுதான் கட்டிலை கவனித்தாள். மெதுவாய் நடந்து அருகே நெருங்கிப் பார்த்தவளின் முகத்தில் வாஞ்சையான முறுவல் தோன்றியது.

வெற்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். உறக்கத்திலும் அவன் உதடுகள் அழுத்தமாய் மூடிக்கிடந்தது. டீஷர்ட்டும் த்ரீ போர்த்தும் அணிந்திருந்தவனின் வலது காலில் முழங்காலின் கீழ் பேன்டேஜ் சுற்றப்பட்டிருந்தது. ப்ராக்சர் எதுவுமில்லை லேசான வீக்கம்தான். நாளைக்கே சரியாயிடும்னு டாக்டர் சொன்னதாக விஷ்ணு சொன்னது நினைவு வர கவலையாய் அவன் அருகே அமர்ந்து கால்களைத் தடவினாள்.
பாவம்... என்னன்னவோ எண்ணங்களுடன் எவ்வளவு அலைச்சல் அவனுக்கு.. அவள் அவன் கையை விட்டுப் போய் விடுவாளோ என்று எவ்வளவு பதறிக் கொண்டு வந்தான்.. இப்போது நிம்மதியாய் உறங்கும் கணவனின் முடியினுள் விரல்களை விட்டு கோதிவிட அவன் லேசாய் அசைந்தான்.

அச்சச்சோ.. என்றபடி கைகளை வேகமாய் இழுத்துக் கொண்டவள் தூக்கம் கலைந்து விட்டதோ..என்ற பயத்துடன் பார்க்க ஒரு புறமாய் திரும்பியவன் அப்படியே உறங்கியும் போனான். ஹப்பா.. நல்ல வேளை எந்திரிக்கலை.. என்றபடி குளியலறை சென்று இரவுடைக்கு மாறி மீண்டும் வந்தவள் குழப்பமாய் நின்றாள். அவுக பக்கத்துல படுக்கறதா இல்லை கீழே படுத்துக்கறதா.. ஒரு முடிவுடன் கட்டிலை சுற்றிக் கொண்டு போய் அந்தப் பக்கமாய் ஏறி அமர்ந்தவள் இடைவெளி விட்டு ஓர் ஓரமாய் ஏறிப் படுத்துக் கொண்டாள். மனதுக்கு நிம்மதியாய் இருந்தது பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலனை அனுபவித்த மாதிரியான ஒரு திருப்தி. அவனின் வாசனையை நாசி நுகர ஏகாந்தமான மனநிலையோடு உறங்கிப் போனாள்.

தீயோ..தேனோ..!!حيث تعيش القصص. اكتشف الآن