37

10.5K 313 213
                                    

வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று
எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல்
கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம்
உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ...!?

வரதராஜனின் வீட்டில் நடைபெற்ற அந்தக் கலந்துரையாடல் வெற்றிகரமாய் நிறைவெய்தியது. படத்தின் ரிலீஸ் டேட் கூட தீர்மானித்தாகி விட்டது. டயரக்டரின் முகத்தில் தெரிந்த மகிழ்வு ஜோதிக்கு நிறைவைத் தந்தது. இத்துடன் அவர் டயரக்ஷனிற்கு புள் ஸ்டாப் வைத்து விடுவதாய் ப்ரஸ்ஸில் கூட அறிவித்து விட்டார். பாவம் மனிதர் உடம்பும் மனதும் சோர்ந்து போய் தெரிகிறார். தனிமை எவ்வளவு கொடுமையானது. ஆறுதலாய் அரவணைக்க ஒரு தோளின்றி...அந்தப் பெரிய வீட்டை பார்த்தவள் ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள். அவருக்கு டாப்ளட்ஸை கொடுத்துவிட்டு இனி அவளும் வீட்டுக்கு கிளம்ப வேண்டும்.
குமார் இன்று நேரமே செல்வதாக சொல்லியிருந்தான்..அப்பா தனியாக இருப்பார்.

அவர் அறைக் கதவை லேசாய் தட்டிவிட்டு சார்.. என்றழைத்தாள். உள்ளே வாம்மா இதோ வந்துர்ரேன்.. குளியலறையிலிருந்து அவர் சத்தம் கேட்டது. அறையினுள் நுழைந்து கூஜாவில் இருந்து தண்ணீரை க்ளாஸில் ஊற்றி வைத்தவள் மாத்திரையை எடுக்க முயன்ற போது ஓரமாய் வைக்கப்பட்டிருந்த பர்ஸ் இவள் கை தடுக்கி கீழே விழுந்தது. கொஞ்சமே நீளமான பழைய பாணியில் இருந்த அது ஓரங்கள் மடிந்து நைந்து போய் இருந்தாலும்  அவள் சந்தித்த நாள் முதலாய் அவர் எப்போதுமே அதனை கையில் வைத்துக் கொண்டிருப்பதை அவள் கண்டிருக்கிறாள். ஏன் இதை இவர் மாற்றிக் கொள்வதே இல்லை என நினைத்ததும் உண்டு. பர்ஸினை எடுத்து வைக்க எண்ணி குனிந்து எடுத்தவள் பார்வை அதனுள் வைக்கப் பட்டிருந்த படத்தில் நிலைத்தது.

அது ஒரு குடும்பப் புகைப்படம். வரதராஜனின் அருகில் அழகாய் பாந்தமாய் சாந்தமான தோற்றத்துடன் பூரிப்பாய் சிரித்தபடி அமர்ந்திருந்த பெண்ணை அவள் பார்த்திருக்கிறாள்..வரதராஜனின் கையினைப் பற்றிக் கொண்டு நெருக்கமாய் அவர் அமர்ந்திருக்க அவர்கள் இருவரின் கழுத்து வளைவினை கைகளால் வளைத்துப் பிடித்தபடி சலுகையாய் தொங்கிக் கொண்டிருந்த சிறுவன்....அவன்.... கண்கள் அந்த படத்திலேயே நிலைகுத்தி நிற்க அவள் அப்படியே சிலையாய் உறைந்து நின்றாள்.

தீயோ..தேனோ..!!Où les histoires vivent. Découvrez maintenant