59

10.2K 315 103
                                    

மெல்ல நெருங்கிடும்
போது நீ தூர போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

அன்றைக்கு தன் தாயின் பிரிவை நினைத்து தவித்து துடித்த போது அவள் பார்த்த அதே தோற்றத்தில் அவனைப் பார்க்கையில் அன்று எழுந்தது போல் அணைத்து ஆறுதல் சொல்ல எழுந்த உணர்வலைகள் கொந்தளிக்க... கையில் ட்ரேயுடன் அவனை நெருங்கினாள்.
வா ஜோதி... அப்டி வச்சிட்டுப் போ நாங்க அப்பறமா குடிக்கறோம்.. என்ற போதுதான் அருகிலேயே நின்றிருந்த வெற்றி கண்களில் பட்டான். அ..அது..வந்து.. அவள் தயங்கியபடி விஷ்ணுவைப் பார்க்க அவன் தன்னிலையிலேயே விட்டத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்தான். ஐயோ நான் விஷ்ணுவோடு பேச வேண்டுமே.. கண்ணீர் துடைத்து கரிசனமாய் தோள்களில் சாய்த்து நான் இருக்கிறேன் உனக்கு என்று சொல்ல வேண்டுமே.. இந்த வெற்றி தனியாய் விட்டுவிட்டுப் போகாமல் இதென்ன வம்பு செய்கிறான்.. அவள் மனதிற்குள் புலம்ப என்ன வந்து...? என்று கேள்வியாய் நோக்கிய வெற்றியிடம் ஒன்றுமில்லை என தலையசைத்து ட்ரேயினை வைத்து விட்டு வெளியேறத்தான் அவளால் முடிந்தது.
போக முன்னும் வீ வீ ஆரை ஒரு பார்வை பார்த்தாள்.. ம்ஹூம் எந்த அசைவுமில்லை.

அதன் பிறகும் சாப்பிடும் போது துக்க வீட்டுக்கு வந்தவர்களை சந்திக்க வரும் போது குளியலறை செல்லும் போது என அறையின் உள்ளேயும் வெளியேயுமாய் விஷ்ணுவை சந்திக்க அவள் எடுத்த அத்தனை முயற்சிகளும் வெற்றியின் உபயத்தால் தோற்றே போக கடுப்பாகிப் போனாள்.

அவள் நினைத்திருந்தால் எப்படியாவது வெற்றி இல்லாத நேரத்தில் விஷ்ணு அறையுள் நுழைந்திருக்க முடியும்தான்.. ஆனால் விஷ்ணுவுடன் அவனில்லாத சமயங்களில் குணவர்த்தன் கூடவே இருந்தார். இத்தனை நடந்த பிறகு ஒரு தாத்தா ஸ்தானத்தில் வைத்திருந்த அவரை சந்திக்கவோ பேசவோ அவளுக்கு தயக்கமாய் இருந்தது. அவரோடு பேச முடியாதது மன வருத்தத்தைத் தந்த போதிலும் அவளால் அதை உடைத்து அவரோடு பேச முடியவில்லை... மனதின் அடியில் குற்ற உணர்வு உறுத்திக் கொண்டே இருந்தது. ஏனோ அவரும் அவளோடு பேச எத்தணிக்கவில்லை மனசில் அது கூட அவளுக்கு கவலையை தந்தது. அதனாலேயே அவனை சந்திப்பது ரொம்பவும் சிரமமாகிப் போனது.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now