43

10.5K 308 131
                                    

விழிதாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்
கொன்றாலும் அழியாத
உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால் தான்
காதல் காவியம்
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரைப் பிரிகிறேன்...!!!

அப்போது சரஸ்வதிக்கு பதினேழு வயது.
அம்மாவின் இறப்பின் பின் அத்தை வீட்டில் வளர்ந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அப்பாவை பிரிந்திருக்க முடியாமல் அடம்பிடித்து கிராமத்திலிருந்து அவருடன் கிளம்பி வந்தாள். நகர வாழ்க்கை அவளை விழி விரிக்க வைத்தது. வெள்ளை தோலும் வழு வழு மேனியும் நுனி நாக்கு ஆங்கிலமும் நாகரீக ஆடையுமாய் பெண்கள் அவளை வாய் பிழக்கச் செய்தார்கள். அதிலும் அப்பா வேலை செய்வது ஒரு பெரிய பணக்கார வீட்டில்.. தானும் அங்கேயேதான் போகிறோம் என்கையில் ஆர்வமும் தயக்கமும் பயமும் சேர்ந்து கலவையான உணர்வுகளுடன்தான் அவள் அங்கே சென்றாள்.

குணவர்த்தனைச் சந்தித்து அவரோடு ஒன்றிப் போய் இரண்டு நாட்கள் அந்த வீட்டில் வேலை செய்து பழக்கப்பட்ட பின்னரே அவளுக்கு விஷ்ணுவர்த்தனை சந்திக்க முடிந்தது... கூடவே வெற்றிமாறனையும்.
ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய் சூர்யா இருவருமே அரவிந்த் சந்த்ருவாக நடித்திருப்பார்கள்.. கலகல சுபாவமாய் ப்ளே பாயாய் குறும்புப் பேச்சுக்களோடு மனசை கொள்ளை கொள்ளும் மேனரிசத்தில் அரவிந்த் இருக்க அந்த கேரக்டருக்கு வெளியே ஒரு க்ரேஸ் இருந்தது கூச்சல் போட்டு ஆர்ப்பரிக்கும் கூட்டம் இருந்தது. ஆனால் சாதுவாய் அமைதியாய் நட்புக்கு மதிப்புக் கொடுக்கும் காதலைக் கூட வெளிப்படுத்தாது தன்னுள்ளேயே புதைத்து கண்ணியமாய் உலாவும் சந்த்ரு கேரக்டரை விரும்பி ரசித்த கூட்டமும் இருக்கத்தான் செய்தது. அது போல முத்தய்யா அறிமுகப் படுத்துகையில் அப்பாவின் பின்னிருந்து தயக்கமாய்  எட்டிப் பார்த்து  விஷ்ணு வர்த்தனின் அழகில் விழி விரித்தாலும் அவள் மனசில் ஒட்டிக் கொண்டதென்னவோ விஷ்ணுவின் அருகில் அமைதியாய் நின்றபடி சாந்தமாய் புன்னகைத்த வெற்றிமாறன்தான்.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now