45

11K 352 131
                                    

நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக கண்டேன்
எதுவரை போகலாம் என்று நீ
சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்...!!

அந்த டீவியை ஆப் பண்ணுங்க எனக்கு டிஸ்டர்ப்பா இருக்கு.. அவள் அவன் புறம் திரும்பி சிடுசிடுக்க கட்டிலில் சாய்ந்தமர்ந்து சானல் மாற்றிக் கொண்டிருந்தவன் எனக்கும்தான் டிஸ்டர்ப்பா இருக்கு.. என முணுமுணுத்தபடி ஆப் செய்தான்.
என்ன.. என்ன டிஸ்டர்ப்பா இருக்கு???
நீ இப்டி பக்க்க்க்கத்துல நைட்டியோட படுத்திருக்கறது..அவன் கண்களில் சிரிப்புடன் சொல்ல
இதுக்கொண்ணும் குறைச்சலில்லை.. என்றபடி எதிர்ப்புறமாய் திரும்பிக் கொண்டாள்.
ஜோ.. ஜோதீ...
என்ன்ன்னனன??
தூங்கவா போற

ஆமா..
கோபமா இருக்கியா..
சட்டென. எழுந்து அமர்ந்தவள் இல்லையே.. தலையிலருந்து கால் வரைக்கும் சும்மா குளுகுளுன்னு இருக்கேன்..
அவ்ளோ ஜில்லுன்னா இருக்க நான் வேணும்ன்னா தொட்டுப் பார்க்கட்டுமா.. அவன் கைககள் அவள் கைகளைத் தீண்ட பட்டெனத் தட்டி விட்டாள்.

அதுதான் அவ கூட அங்க இங்கன்னு தொட்டு தொட்டு ஆட தெரியுதில்ல அப்றம் என்கிட்ட ஏன் வர்ரீங்க..
ஹேய் அவதானே கூப்ட்டா
அவ கூப்ட்டா போய்டனுமா
நான் வேணாம்னுதானேடீ சொன்னேன் திரும்ப கூப்டுறப்ப முடியாதுன்னு சொல்றது நாகரீகமில்ல
அதானே அது நாகரீகமில்லதான்
புரியாம பேசாத ஜோ
என்ன புரியாம பேசறன் நான்.. அன்னிக்கும் அப்டிதான் போட்டோஷுட்ல அவகூட இழைஞ்சிட்டு நின்னீங்க.. அது என்ன தொழில்தர்மமா..
ஜோ கோபத்தை கிளறாத.. நான் ஹீரோன்னு தெரிஞ்சுதான என் கூடப் பழகின.. என்னோட ப்ரொபஷ்ஷன்ல அதெல்லாம் இருக்கும்னு உனக்கு தெரியாது..??
நீங்க என்னை பார்த்ததும் அவகூட இன்னும் ஒட்டிக்கல்லன்னு சொல்லுங்க பார்க்கலாம்...
ஆமா உன்னை வெறுப்பேத்தனும்னு பண்ணேன்.. இப்போ என்ன அதுக்கு??
அது மாதிரியேதான் இன்னிக்கும் பண்ணீங்க..
ஏய்.. என் பொறுமையை சோதிச்சிட்டிருக்க நீ.. எப்பவோ நடந்ததை இப்போ கேஷுவலா நடந்ததோட ஒன்னு சேர்க்காத..
அப்டிதான் பண்ணுவேன்.. ஆத்திர மிகுதியிலும் அவன் அவளோடு இழைந்ததை தாங்க முடியாமலும் அவள் கண்கள் நீரால் நிரம்பியிருந்தது.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now