58

9.2K 303 126
                                    

என் உயிரணுவின் வரம்
உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான்
உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே
உன்னைக் கண்டேன்
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்
வளர்ந்ததுமே யாவரும்
தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்....!!!


விஷ்ணு அவர் செஞ்சது ரொம்ப்ப்ப்ப பெரிய தப்புதான்.. மனசு தடுமாற்றத்துல போதையில அவரையே அவர் மறந்து பண்ண அந்தத் தப்புக்கு அவர் கொடுத்த விலையும் ரொம்பப் பெரிசு. உங்கம்மாவோட உயிர்.. உங்களோட பாசம்.. இது ரெண்டுத்தையும் இழந்து அவர் அனுபவிக்கற வேதனை... உங்கம்மா சாகறப்ப என்னை உங்க பொண்டாட்டின்னோ எம் பிள்ளையை உங்க மகன்னோ நீங்களா எக் காலத்திலயும் சொல்லக் கூடாது.. இது என் மேல ஆணைன்னு எழுதி வச்ச கடிதத்தை பாத்தப்பவே அவர் பாதி செத்துட்டார்.. அவர் கூட நீங்க அன்பா அவர் மகனா இருக்க வேணாம்.. பட் மேல மேல வேதனையை கொடுக்காதீங்க.. எல்லா மனுஷங்களுக்கும் மனசுல அடிச்சா வலிக்கதான் செய்யும்.. அன்று இதே அறையில் இதே போல அம்மாவின் ஓவியத்தின் முன் அமர்ந்திருந்த விஷ்ணுவிடம் ஜோதி சொன்னது ஒவ்வொரு வார்த்தையாக நினைவிருந்தது அவனுக்கு.

கன்னத்தை தடவிப் பார்த்தான் ஈரமாயிருந்தது. இந்த ஈரம் அவனுக்கு புதிது. தந்தைக்காய் எப்போதோ சிந்திய கண்ணீர் இன்றும் காயாமல் அப்படியே ஈரப் பிசுபிசுப்புடன் இருப்பதாகப் பட்டது.
அப்பா.. ரொம்ப ஆழமான வார்த்தை... அம்மாவின் அறிமுகத்தில்தான் அப்பா தெரிகிறது என்கிறார்கள்.. அப்பாவால்தான் உலகிற்கு நாம் தெரிகிறோம் என்பதை பலர் உணர்வதில்லை. அன்றைக்கு என்னிடமிருந்து ஜோவை ஏன் பிரித்தீர்கள் என்றவன் கர்ஜித்த போது முகம் நிறைந்த கோப மூச்சும் முறைப்பும்  திகைப்புமான அப்பாவைத்தான் அவன் எதிர்பார்த்தது. ஆனால் வந்ததோ நலிந்த ஒல்லியான வெடவெடத்த உடலும் கசந்த முறுவலும் இயலாமை நிறைந்த நிராசைப் பார்வையும் கொண்ட அப்பாவை நினைவு கூறும் ஒரு உருவத்தையே.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now