61

12.9K 373 316
                                    

வீதியில் வீசிட கண்டேன்
சாமந்தி பூ வாசம்
காற்றில் மோதிர மாற்றம்
கல்யாண ஆவேசம்
வலிப்பது போல் தோன்றும்
இனிப்பது தான் எனும்
கனவுலகில் இல்லா சுகம்
பார்வை போகிற தூரம்
நீ இன்றி யார் வேண்டும்
பாவை ஊன் உயிர் எங்கும்
ன்னோடு ஒன்றாகும்
விழி இரண்டும் புதிது
இமை இரண்டும் புதிது
கனவுகளோ இனிது
கடைவதெல்லாம் அமுது..!!

இரு நாட்களின் நகர்வின் பின்...

இருளை கிழித்துக் கொண்டு மெதுவாய் உயர்ந்த கதிரவனின் கீற்றுக்களில் வானம் புடவை மாற்றிக் கொண்டிருந்தது. பறவைகளின் கீச்சொலியில் தூக்கம் கலைய ஜோதி சுவரைத் திரும்பிப் பார்த்தாள்.. ஆறு பதினேழு. எழுந்துதான் என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணியபடி சோம்பலாய் புரண்டு தலையணையை இறுக்கிக் கொண்டு உறக்கத்தைத் தொடர்ந்தாள்.

சாவதனமாய் எட்டு மணியைப் போல் எழுந்தவள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சமையலறைக்குச் சென்று  கையில் இரண்டு கப் காபியுடன் வந்தாள். இனி வைஷு அவள் வீட்டிற்கு அழைத்துப் போக வந்துவிடுவாள். தன் மனநிலையை மாற்றி பழையது போல் பழகிக் கொள்ள வேண்டும். வலியை மறைத்து வழமை போல் வாழ வேண்டும்...ம்ஹ்ம்... நெடு மூச்சொன்றை வெளியிட்டாள்.

குமார் எட்டு மணிக்கெல்லாம் கடையை திறந்து விடுவான். காபியில் அவனுக்கு ஒன்றை கொடுத்து விட்டு மற்றயதை போர்டிகோவில் அமர்ந்து தோட்டத்தைப் ரசித்தபடி அருந்துவது அவளது வழக்கம். காபி ட்ரேயை வைத்து விட்டு கதவைத் திறந்த போது பளபளப்பாய் கதவடியில் வைக்கப்பட்டிருந்தது அந்த சிறு பெட்டி. கிப்ட் பாப்பரால் மினுமினுப்பாய் சுற்றப்பட்டிருந்த பாக்ஸினை கையில் எடுத்தவள் சுற்றும் முற்றும் திரும்பி யாரேனும் இருக்கிறார்களா.. எனப் பார்த்தாள். மஞ்சள் நிறக் குருவி ஒன்று மாமரத்தினின்றும் படபடப்பாய் பறந்து சென்றது..மற்றபடி அமைதியாய் இருந்தது சூழல்.

தீயோ..தேனோ..!!Where stories live. Discover now