தானாய் தொலைந்த கதை

5 2 0
                                    

கண்ணில் நீர் துளிகள்
மின்னல் என வந்து செல்ல
உந்தன் பார்வை அதை வானவில்லாய் மாற்றி வெல்ல..
பாசம் ஏதுமில்லா பாறை எல்லாம் பூக்கள் நெய்ய
எந்தன் மனதினுள்ளே மௌணமாய்
நீயும் செல்ல

பதவன்கள் யாருமில்லாமல்..
உன் பதில் தேடி நானும் வந்தேனே

வெயில் காயும் நேரமில்லை
குளிர் காயும் நேரத்திலும்
விண்மீனும் வெண்ணிலவும் வெப்பமாய் தகிக்க கண்டேன்..

என்னைத் தேடி உந்தன் வானம்
ஏனோ ஏதோ வந்து சொல்லுதே...

தானாய் தொலைந்த கதை நான் அறிந்து என்ன செய்ய?

நீயாய் விழி அசைத்தால்
தஞ்சம் கொள்வேன் உன் அருகே

வாசல் திறந்து வைத்து வாடகை கேட்கபதென்ன

நாட்கள் நகர்கிறதே நானம் கொண்டு என்ன செய்ய

நாவை அடக்கிவிட்டேன் நாழிகையை என்ன செய்ய

நாளை உனதருகே நானும் மெல்ல வந்து சேர

கொள்ளை கொண்டவளே நம்மையே காதல் கொள்ள

காதல் காத்திருக்க
வாய்மை பூத்திருக்க
உன் விழி பார்த்து காதல் சொல்லவா..
உன் விரலோரம் வெட்கம் சிந்தவா..

இரயில் ஓடும் பாதையிலே
நம் மனம் ஓட கண்டு நின்றேன்...

இரயில் போகும் தூரம் யாவும்
நம் விழி போக காத்திருக்க
உன் விரல் செல்லும் வழிகள் யாவும்
என் உயிர் போகும் மாயமென்ன

உன் தலையனை மடியில் நானும்
தலை சாய்த்து உறங்க வேண்டி
வெண்ணிலவும் விண்ணில் மீனும்
உன் விழி பார்த்து காத்திருகிறதே...

உன் பதில் வேண்டி
என்னோடு இரவும் விழித்திருக்கிறது....

SwaasamDonde viven las historias. Descúbrelo ahora