முகப்பரு

5 1 0
                                        

உன் முகத்தில் பருக்கள்..
என்னை முத்தமிட சொல்லுது
மோகம் கொள்ள வைக்குது
கட்டி அணைத்து உன் கண்ணத்தில்
காதல் செய்யச் சொல்லுது...

பருக்கள் பனி துளி..
முத்தத்தில் உடையும் நீர் குமிழி..

இயற்கை வைத்த மை
எனதாக துடிக்கும் உன் பெண்மை
அதன் வெளிப்பாடோ..!?

படைத்து முடித்தபின் வைக்கும் முற்றுப்புள்ளி
வைக்க மனமின்றி அவன்
வைத்த தொடர் புள்ளி..

புள்ளிகளை இணைத்தால்!
உன் கண்ணத்தில்
நம் உருவம்..

இணையாய் இருவர் உருவம்
உலகம் இணையும் நொடியில்...

உலகம் உருகும்.

SwaasamWhere stories live. Discover now