பரண்

8 2 0
                                        

உன் வீட்டு பரணில்
தூசியாய் கூட நான் இருக்கலாம்...

சுத்தம் செய்யும் போது கொஞ்சம் கவனமாய்..

பழுதைடைந்த உறவுகள்
பழைய நினைவுகள்
பரணில் பதுங்கி வாழ்வது இயல்பு தானே...

அதில்
களிப்பு உறச் செய்வன சில
கழிக்க வேண்டியது சில...

களிப்பை கழிக்காதிருத்ததல் நலம்...

களிப்பாய் நான்.

மீண்டும் பரணிலா?
உன் மனதிலா?

பதில் வேண்டி விழியின் தவம்...

SwaasamWhere stories live. Discover now